Brinjal Biryani: சுவை அள்ளும்! மனம் துள்ளும்! கத்தரிக்காய் பிரியாணி செய்வது எப்படி! இதோ ஈசி ரெசிபி!
Brinjal Biryani: சைவ பிரியாணி மற்றும் அசைவ பிரியாணி என பல வகையான பிரியாணிகள் உள்ளன. காய்கறிகளை வைத்தும் பிரியாணி செய்யப்படுகின்றன. நாம் அன்றாடம் குழம்பு வைக்க பயன்படுத்தும் கத்தரிக்காயை வைத்து சுவையான பிரியாணி செய்ய முடியும். இதனை எப்படி செய்வது என்பதை இங்கு காண்போம்.

இந்தியாவில் பெரும்பாலான மக்களால் விரும்பப்படும் உணவாக பிரியாணி இருந்து வருகிறது. குறிப்பாக ஆன்லைன் உணவு ஆப்களில் அதிகமாக விற்பனையாகும் உணவாகவும் பிரியாணி இருந்து வருகிறது. அந்த அளவிற்கு மக்களுக்கு பிரியாணி பிரதான உணவாக மாறிவிட்டது. சைவ பிரியாணி மற்றும் அசைவ பிரியாணி என பல வகையான பிரியாணிகள் உள்ளன. காய்கறிகளை வைத்தும் பிரியாணி செய்யப்படுகின்றன. நாம் அன்றாடம் குழம்பு வைக்க பயன்படுத்தும் கத்தரிக்காயை வைத்து சுவையான பிரியாணி செய்ய முடியும். இதனை எப்படி செய்வது என்பதை இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்
8 முதல் 10 சின்ன கத்தரிக்காய்
2 பெரிய வெங்காயம்
ஒரு கப் பாசுமதி அரிசி
ஒரு கப் தேங்காய்ப் பால்
எலுமிச்சை பழம்
தேவையான அளவு உப்பு
கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்
சிறிதளவு கறிவேப்பிலை
ஒரு டீஸ்பூன் எண்ணெய்
1 டீஸ்பூன் நெய்
ஒரு பட்டை
3 கிராம்பு
ஒரு ப்ரிஞ்சி இலை
4 ஏலக்காய்
ஒரு கொத்து புதினா
ஒரு கொத்து கொத்தமல்லித் தழை
பிரியாணி மசாலா செய்ய
4 முதல் 6 பச்சை மிளகாய்
சிறிய இஞ்சி துண்டு
6 பல் பூண்டு
ஒரு டீஸ்பூன் சோம்பு
அரை டீஸ்பூன் கரம் மசாலா தூள்
செய்முறை
முதலில் கத்தரிக்காயில் உள்ள காம்பை நீக்கிவிட்டு, நான்காக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். அப்போதுதான் கத்தரிக்ககாயின் நிறம் மாறாமல் இருக்கும். பின்னர் அரிசியைக் கழுவி சுத்தம் செய்து தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிரியாணி மசாலா செய்ய ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மற்றும் சொம்பு ஆகியவற்றை போட்டு வறுக்க வேண்டும். பின்னர் அவை ஆறிய பின்னர் மிக்சி ஜாரில் சேர்க்க வேண்டும். இவற்றுடன் கரம் மசாலாவையும் சேர்த்து அரைக்க வேண்டும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும், அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், மற்றும் ப்ரிஞ்சி இலையை ஒவ்வொன்றாகப் போட்டுமிதமான சூட்டில் வறுக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து, வெங்காயம் லேசாக நிறம் மாறும் வரை வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதைச் சேர்த்து, சில நிமிடங்கள் நன்கு வதக்கவும். பிறகு கத்தரிக்காயைப் போட்டு சில நிமிடங்கள் வதக்கி, பொடியாக நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லித் தழைச் சேர்த்து வதக்கவும். பிறகு தேவையான அளவு உப்புச் சேர்த்து, தேங்காய்ப் பால் மற்றும் தண்ணீர் கலந்து சேர்க்கவும். தண்ணீர் நன்கு கொதிக்கத் தொடங்கியதும் ஊறவைத்த அரிசியைத் தண்ணீரை வடித்துவிட்டுச் சேர்க்கவும். பிறகு எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொதிக்கவிடவும். கொதி வந்ததும் மூடி வைத்து, ஆவி வந்ததும் வெய்ட் போட்டு 2 விசில் வந்ததும் இறக்கவும். பிறகு ஆவி அடங்கியதும் திறந்து சாதம் உடையாமல் கிளறிவிடவும். கத்தரிக்காய் பிரியாணி தயார். தயிர் அல்லது தயிர் பச்சடியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

டாபிக்ஸ்