நன்மைகள் பல தரும் காய்கறி ஊறுகாய்! டேஸ்ட் அள்ளும் சுவையுடன் செய்யும் முறை! இதோ பக்கா ரெசிபி!
காய்கறிகளை வைத்து சுவையான ஊறுகாய் செய்யலாம். இது மிகவும் சுவையாகவும், சாத்தானதாகவும் இருக்கும். எந்த வகை உணவுக்கும் நீங்கள் இதனை வைத்து சாப்பிடலாம். இந்த காய்கறி ஊறுகாய் செய்யும் எளிய முறையை தெரிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
நமது அன்றாட உணவில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு பொருள் தான் காய்கறிகள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் ஒரு உணவாகும். இந்த காய்கறிகள் வைத்து பல விதமான உணவு வகைகளை செய்யலாம். ஆனால் இந்த காய்கறிகளை வைத்து நீங்கள் இது வரை குழம்பு, பொரியல், அவியல் போன்ற உணவுகளை மட்டுமே செய்து இருப்பீர்கள். ஆனால் காய்கறிகளை வைத்து சுவையான ஊறுகாய் செய்யலாம். இது மிகவும் சுவையாகவும், சாத்தானதாகவும் இருக்கும். எந்த வகை உணவுக்கும் நீங்கள் இதனை வைத்து சாப்பிடலாம். இந்த காய்கறி ஊறுகாய் செய்யும் எளிய முறையை தெரிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
தேவையான பொருட்கள்
பொடி செய்ய
1 டேபிள்ஸ்பூன் கடுகு
1 டேபிள்ஸ்பூன் வெந்தயம் -
காய்கறி ஊறுகாய் செய்ய
ஒரு பெரிய சைஸ் காலிஃபிளவர்
ஒரு பெரிய கேரட்
ஒரு எலுமிச்சை பழம்
ஒரு பாதி அளவுள்ள மாங்காய்
2 பச்சை மிளகாய்
10 பற்கள் பூண்டு
சிறிய அளவிலான இஞ்சி துண்டு
1 டேபிள்ஸ்பூன் உப்பு
3 டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள்
2 டீஸ்பூன் வெந்தயப்பொடி
2 டீஸ்பூன் கடுகுப்பொடி
அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள்
எலுமிச்சை சாறு
4 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
அரை டீஸ்பூன் கடுகு
3 வற மிளகாய்
செய்முறை:
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதனை சூடாக்கவும். கடாய் சூடானதும் அதில் கடுகை போட்டு வறுக்கவும். கடுகு வெடிக்கும் வரை வறுத்து ஆறவிடவும். அடுத்து அதே கடாயில் வெந்தயத்தை வறுக்கவும். வெந்தயம் சிவந்து மணம் வரும் வரை வறுக்கவும். பின்னர அதனையும் எடுத்து ஆறவைக்கவும். இவை இரண்டும் ஆறியபின், இரண்டு பொருட்களையும் தனி தனியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பினார் ஒரு அகன்ற பாத்திரத்தில், காலிஃபிளவர், கேரட், எலுமிச்சை பழம், மாங்காய் ஆகியவற்றை நறுக்கி போட வேண்டுமம். இவை அனைத்தும், சிறிய துண்டுகளாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். இவை அனைத்தும் ஒரே அளவில் இருக்க வேண்டும். பின்னர் இதில் பச்சை மிளகாய், பூண்டு மற்றும் இஞ்சி ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இவற்றுடன், உப்பு, மிளகாய் தூள், வெந்தயத்தூள், கடுகுத்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று நன்கு கலக்குமாறு கிளறி விட வேண்டும்.
பின் இதில், எலுமிச்சை சாறு மற்றும் எண்ணெய் ஊற்றி கலக்கவும். பின்னர தாளிப்பதற்காக ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடான பின் அதில் கடுகு, வற மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை போட்டு வறுக்க வேண்டும். இந்த தாளிப்பை நாம் செய்து வைத்திருந்த காய்கறிகள் கலவையில் சேர்க்க வேண்டும். பின்னர இவை எல்லாவற்றையும் நன்கு கலக்க வேண்டும். இப்போது சுவையான மற்றும் சத்தான காய்கறி ஊறுகாய் தயார். மற்ற ஊறுகாய்களை விட இவை உடலுக்கு நல்லதாகும். நீங்களும் உங்கள் வீடுகளில் செய்து பார்த்து வீட்டில் உள்ள அணைவருக்கும் கொடுத்து மகிழுங்கள்.
டாபிக்ஸ்