சாஃப்ட் சாஃப்ட் ரசகுல்லா சாப்பிட வேண்டுமா? வீட்டிலேயே செய்யலாம் ஈசியா! அசத்தலான ரெசிபி உள்ளே!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சாஃப்ட் சாஃப்ட் ரசகுல்லா சாப்பிட வேண்டுமா? வீட்டிலேயே செய்யலாம் ஈசியா! அசத்தலான ரெசிபி உள்ளே!

சாஃப்ட் சாஃப்ட் ரசகுல்லா சாப்பிட வேண்டுமா? வீட்டிலேயே செய்யலாம் ஈசியா! அசத்தலான ரெசிபி உள்ளே!

Suguna Devi P HT Tamil
Published Apr 10, 2025 01:34 PM IST

இந்தியாவில் செய்யப்படும் அனைத்து விதமான இனிப்புகளும் மிகவும் அருமையான சுவையில் இருக்கும். அதிலும் பிரபலமான இனிப்புகளில் ஒன்றான ரசகுல்லா இல்லாத பேக்கரியே இருக்காது. இந்த ரசகுல்லா செய்வது எப்படி என்பதை நாம் இங்கு பரக்கப்போகிறோம்.

சாஃப்ட் சாஃப்ட் ரசகுல்லா சாப்பிட வேண்டுமா? வீட்டிலேயே செய்யலாம் ஈசியா! அசத்தலான ரெசிபி உள்ளே!
சாஃப்ட் சாஃப்ட் ரசகுல்லா சாப்பிட வேண்டுமா? வீட்டிலேயே செய்யலாம் ஈசியா! அசத்தலான ரெசிபி உள்ளே!

தேவையான பொருட்கள்

2 லிட்டர் கெட்டியான பால்

ஒரு கப் தண்ணீர்

3 டேபிள்ஸ்பூன் வினிகர்

2 கப் சர்க்கரை

2 ஏலக்காய்

சிறிதளவு குங்குமப்பூ

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்றி சூடாக்க வேண்டும். பின்னர் ஒரு அகன்ற பாத்திரத்தை எடுத்து அதில் ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும். பின் இதில் வினிகரை சேர்த்து நன்கு கலக்கவும். இந்த சமயத்தில் பால் கொதிக்க ஆரம்பித்ததும் படிப்படியாக வினிகர் சேர்த்த தண்ணீரை ஊற்றி பாலை திரிய வைக்கவும். இப்பொழுது திரிந்த பாலை வடிகட்டி எடுக்கவும். இதனை தண்ணீரில் கழுவி அதிகப்படியான தண்ணீரை ஒரு துணியின் உதவியுடன் பிழிந்து எடுக்கவும். இப்பொழுது நமக்கு கெட்டியான பன்னீர் கிடைக்கும். இதனை 1 மணி நேரம் துணியில் வைக்கவும். 1 மணி நேரம் கழித்து, இதனை எடுத்து நன்றாக பிசையவும், அது மென்மையாகவும் நன்றாகவும் இருக்கும்.

இப்படி பிசைந்த மாவை பகுதிகளாகப் பிரித்து வைத்துக் கொள்ளவும். பின்னர் தனியாக வேறு ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து சர்க்கரை பாகு காய்ச்சி எடுக்க வேண்டும். பிறகு இதில் ஏலக்காய் தூள் மற்றும் குங்குமப்பூ சேர்க்கவும். நன்றாக கலந்து கொதிக்க வைக்கவும். மெதுவாக இந்த சர்க்கரை பாகில் ரசகுல்லா உருண்டைகளைச் சேர்க்கவும். பாத்திரத்தை ஒரு மூடியால் மூடி, உருண்டைகளை சர்க்கரை பாகில் சில நிமிடம் கொதிக்க விடவும். உருண்டைகளை நன்றாக பிரட்டி போட்டு கொதிக்க விடவும். சிலநிமிடங்களுக்குப் பிறகு, அடுப்பை அணைத்து, ரசகுல்லாவை ஆற விடவும். அவ்வளவுதான், ரஸ்குல்லாஸ் ரெடி. நீங்களும் இதனை வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.