Curd Rice: தயிர் சாதம் சூப்பரா இருக்கணுமா? இப்படி செஞ்சு பாருங்க!எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க!
Curd Rice:பலரது வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பும் ஒரு பொதுவான உணவு என்னவென்றால் தயிர் சாதம் தான். இந்த தயிர் சாதத்தை மிகவும் ருசியான முறையில் எப்படி செய்யலாம் என்பதை இங்கு தெரிந்துக்கொள்ளலாம்.

அலுவலக பணிகள் கூட சில சமயங்களில் எளிதாக தெரியும். அதைவிட வீட்டில் உள்ள சமையல் மிகவும் கடினமான கரியமாகும். தினம் தோறும் வித்தியாசமாக அனைவருக்கும் பிடிக்கும் படி சமைப்பது சற்று சிக்கலான செயல் தான். ஏனென்றால் வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் வெவ்வேறான உணவுகளே பிடிக்கும். அப்பொழுது நாம் செய்யும் உணவு யாரேனும் ஒருவருக்கு பிடிக்காமல் போக வாய்ப்புண்டு. குறிப்பாக குழந்தைகளுக்கு பிடித்தவாறு உணவுகளை தயார் செய்வது தான் முக்கியம். குழந்தைகள் பொதுவாகவே எதையும் சாப்பிடாமல் அடம் பிடிப்பார்கள். எனவே பிடிக்காத சாப்பாட்டை கொடுத்தால் உடனே மறுத்து விடுவார்கள். பலரது வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பும் ஒரு பொதுவான உணவு என்னவென்றால் தயிர் சாதம் தான். இந்த தயிர் சாதத்தை மிகவும் ருசியான முறையில் எப்படி செய்யலாம் என்பதை இங்கு தெரிந்துக்கொள்ளலாம்.
தேவையான பொருள்கள்
அரை கப் அரிசி
அரை கப் தயிர்
கால் கப் பால்
ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லித் தழை
தேவையான அளவு உப்பு
தயிர் சாதம் தாளிக்க
3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
அரை டீஸ்பூன் கடுகு
அரை டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
2 பச்சை மிளகாய்
ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை
செய்முறை
முதலில் அரிசியை நன்றாக கழுவி ஊற வைக்க வேண்டும். குறைந்தது 20 நிமிடங்கள் மட்டும் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஊற வைத்த அரிசியில் இரண்டு மடங்கு அளவுள்ள தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து குக்கர் அல்லது சட்டியில் வேக வைக்கவும். சாதம் வெந்த பின்னர் ஆற வைத்து எடுத்துக் கொள்ளவும். சட்டியில் வேக வைக்கும் போது சாதம் உதிரி உதிரியாக வரும். பின்னர் பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். சாதம் நன்றாக ஆறிய பின் தயிர், பால் இரண்டையும் ஊற்றி ஒரு கரண்டியால் மசித்து வைக்க வேண்டும். இந்தக் கலவை மிகவும் கெட்டியாக இல்லாமல் கொஞ்சம் தளர்வாக இருக்க வேண்டும். அப்போது தான் தயிர் சாதம் நீண்ட நேரத்திற்கு காய்ந்து போகாமல் இருக்கும்.
அடுத்து அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி விட வேண்டும். இப்பொழுது பச்சை மிளகாய் நன்கு வதங்கியதும் முன்னதாக கலந்து வைத்துள்ள தயிர் சாதத்தை சேர்த்து கிளறி, மல்லித்தழையை தூவி அடுப்பை அணைக்கவும். உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும். சுவையான தயிர்சாதம் ரெடி. ஊறுகாய் அல்லது துவையலுடன் பரிமாறலாம். இது போன்ற வெரைட்டி சாதங்களை செய்வதற்கு நேரமும் குறைவாகவே செலவாகும். மேலும் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த உணவை விரும்பி சாப்பிடுவார்கள். மதிய உணவிற்கும் இதனை கொண்டு செல்லலாம். இதை உங்கள் வீடுகளில் ட்ரை பண்ணி பாருங்க.

டாபிக்ஸ்