சாதம் சப்பாத்தி என எல்லா உணவுகளுடனும் சேர்த்து சாப்பிட ஒரு டிஷ்! அது தான் கிராமத்து ஸ்டைல் கொண்டைக்கடலை குழம்பு!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சாதம் சப்பாத்தி என எல்லா உணவுகளுடனும் சேர்த்து சாப்பிட ஒரு டிஷ்! அது தான் கிராமத்து ஸ்டைல் கொண்டைக்கடலை குழம்பு!

சாதம் சப்பாத்தி என எல்லா உணவுகளுடனும் சேர்த்து சாப்பிட ஒரு டிஷ்! அது தான் கிராமத்து ஸ்டைல் கொண்டைக்கடலை குழம்பு!

Suguna Devi P HT Tamil
Published Jun 16, 2025 01:58 PM IST

கொண்டைக்கடலை வைத்து பல விதமான குழம்பு செய்யப்படுகிறது. இன்று சப்பாத்தி, சாதம் என பல விதமான உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுமாறு கொண்டைக்கடலை குழம்பு எப்படி செய்வது எனத் தெரிந்துக் கொள்வோம்.

சாதம் சப்பாத்தி என எல்லா உணவுகளுடனும் சேர்த்து சாப்பிட ஒரு டிஷ்! அது தான் கிராமத்து ஸ்டைல் கொண்டைக்கடலை குழம்பு!
சாதம் சப்பாத்தி என எல்லா உணவுகளுடனும் சேர்த்து சாப்பிட ஒரு டிஷ்! அது தான் கிராமத்து ஸ்டைல் கொண்டைக்கடலை குழம்பு!

தேவையான பொருட்கள்

200 கிராம் கொண்டைக்கடலை

2 பெரிய வெங்காயம்

2 தக்காளி

2 பச்சை xமிளகாய்

3 பல் பூண்டு

1 துண்டு இஞ்சி

1 மேஜைக்கரண்டி சீரகம்

1 மேஜைக்கரண்டி மல்லி தூள்

1 மேஜைக்கரண்டி கரம் மசாலா

1 மேஜைக்கரண்டி அம்ச்சூர் தூள்

¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

தேவையான அளவு மிளகாய் தூள்

தேவையான அளவு உப்பு

தேவையான அளவு எண்ணெய்

சிறிதளவு கொத்தமல்லி

செய்முறை

முதலில் கொண்டைக்கடலை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சுமார் 6 மணி நேரம் வரை ஊற வைத்து பின்பு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, மற்றும் இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்து கொள்ளவும். அடுத்து ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் கொண்டைக்கடலையை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் கொண்டைக்கடலை, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், மற்றும் சிறிதளவு உப்பு போட்டு ஒரு மூடி போட்டு அதை சுமார் 3 லிருந்து 4 விசில் வரும் வரை வேக விடவும். விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு கொண்டைக்கடலையை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் கொண்டைக்கடலையில் இருந்து ஒரு கையளவு கொண்டைக்கடலையை எடுத்து போட்டு அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும். பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

எண்ணெய் சுட்ட பின் அதில் சீரகத்தை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வறுக்கவும். அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா, அம்ச்சூர் தூள், மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை போட்டு அதை நன்கு கலந்து விடவும். பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு தக்காளி நன்கு மசியும் வரை அதை வேக விடவும்.

தக்காளி நன்கு மசிந்தவுடன் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விடவும். (சுமார் ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்தால் சரியாக இருக்கும்.) பின்னர் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாயை போட்டு அதை நன்கு கலந்து விடவும். அடுத்து அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் கொண்டைக்கடலையை போட்டு நன்கு கலந்து விட்டு அதை கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்ததும் அதில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் கொண்டைக்கடலையை பக்குவமாக சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் 4 லிருந்து 5 நிமிடம் வரை வேக விடவும். 5 நிமிடத்திற்குப் பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விட்டு கொண்டைக்கடலை குழம்பை எடுத்து சாதத்தில் ஊற்றி அதை சுட சுட பரிமாறவும்.