Kuruma Recipe: இனி இந்த ஒரு குருமா போதும்! எல்லா விதமான உணவுக்கும்! ஸ்பெஷல் குருமா செய்வது எப்படி! ஈசி ரெசிபி!
Kuruma Recipe:சாப்பாடு, இட்லி, தோசை மற்றும் சப்பாத்தி என அனைத்திற்கும் தொட்டு சாப்பிடக்கூடிய ஒரு உணவு செய்தால் மிகவும் எளிதான ஒன்றாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு குருமாவை தான் இங்கு காணப் போகிறோம்.

நமது வீடுகளில் காலை செய்யும் இட்லி, தோசை மற்றும் மதியம் சாப்பிடும் சாப்பாடு ஆகிய இரு வெவ்வேறு உணவுகளுக்கு வெவ்வேறு வகையான இணை உணவுகளை செய்வது வழக்கமான ஒன்றாகும். தினமும் ஒரு நாளைக்கு குழம்பு, சட்னி என தனித்தனியாக செய்வதற்கே நீண்ட நேரம் ஆகிவிடும். அதுவே ஒவ்வொரு நாளும் கடினமாக இருக்கும். சாப்பாடு, இட்லி, தோசை மற்றும் சப்பாத்தி என அனைத்திற்கும் தொட்டு சாப்பிடக்கூடிய ஒரு உணவு செய்தால் மிகவும் எளிதான ஒன்றாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு குருமாவை தான் இங்கு காணப் போகிறோம். காய்கறிகள் மற்றும் மசாலா பொருட்களை சேர்த்து செய்வதால் சாதத்திற்கும் சப்பாத்திக்கும் இட்லி, தோசை போன்ற காலை உணவிற்கும் என அனைத்து விதமான உணவுகளுக்கும் இந்த குருமா மிகவும் சரியான இணை உணவாக இருக்கும். இதனை செய்வதும் மிகவும் எளிதான ஒன்றாகும். வீட்டில் உள்ள அனைவரும் இந்த வகை குருமாவை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த குருமாவை எளிமையாக வீட்டில் செய்யும் முறையை இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்
1 கப் உருளைக்கிழங்கு
1 கப் கேரட்
1 கப் பீன்ஸ்
1 கப் பச்சை பட்டாணி
2 பெரிய வெங்காயம்
6 பச்சை மிளகாய்
3 டீஸ்பூன் எண்ணெய்
1 டீஸ்பூன்
1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
முழு மசாலா உப்பு
2 கப் தண்ணீர்
ஒரு கொத்து கறிவேப்பிலை
சிறிய இலவங்கப்பட்டை
2 ஏலக்காய்
4 கிராம்பு
சிறிதளவு கல்பாசி,
ஜாவித்ரி
பிரியாணி இலை
செய்முறை
குருமா செய்வதற்கு முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், முந்திரிப்பருப்பு, பொட்டுக்கடலை, பெருஞ்சீரகம், இலவங்க பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சிறிதளவு தண்ணீர் ஆகிய அனைத்தையும் போட்டு மிகவும் நைசாக அரைக்க வேண்டும். இந்த அரைத்த பேஸ்ட்டை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் பட்டை கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, ஜாவித்திரி பிரியாணி இலை ஆகியவற்றை சேர்க்கவும். இவை அனைத்தும் சிறிதளவு வறுபட்டதும் இதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வறுக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வேளையில் நறுக்கிய உருளைக்கிழங்கு கேரட், நறுக்கிய பீன்ஸ் மற்றும் ஊறவைத்த பச்சை பட்டாணி ஆகிய காய்கறிகளை சேர்த்து இவை அனைத்தையும் சேர்த்து வதக்க வேண்டும்.
சில நிமிடங்கள் வதங்கிய பின்பு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும். இவை வறுபட்டதும் கடாயில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து சில நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். பின்னர் காய்கறிகள் வெந்ததும் நாம் அரைத்து வைத்த மசாலா விழுதை சேர்த்து மீண்டும் வேக விட வேண்டும். இறுதியாக கூடுதலாக தண்ணீர் கலந்து மீண்டும் இதமான சூட்டில் வேக வைக்க வேண்டும். கடைசியாக ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்த்து கிளறிவிட்டு அடுப்பில் இருந்து குருமாவை இறக்கலாம். இப்போது சுவையான குருமா தயார். இதனை சூடான சாதம் சப்பாத்தி இட்லி தோசை என எல்லாவற்றிற்கும் வைத்து சாப்பிடலாம். சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும். காய்கறிகள் சேர்த்து இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

டாபிக்ஸ்