சண்டே ஸ்பெஷல்! எந்த மீனாக இருந்தாலும் இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்கள்! அசத்தலான மீன் குழம்பு ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சண்டே ஸ்பெஷல்! எந்த மீனாக இருந்தாலும் இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்கள்! அசத்தலான மீன் குழம்பு ரெசிபி!

சண்டே ஸ்பெஷல்! எந்த மீனாக இருந்தாலும் இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்கள்! அசத்தலான மீன் குழம்பு ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Jan 05, 2025 11:29 AM IST

ஞாயிற்றுக் கிழமை என்றாலே பெரும்பாலான இந்தியர்களின் வாழ்வில் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் அசைவ உணவு தான். அசைவ உணவு இல்லாமல் ஒரு சராசரி இந்தியனின் ஞாயிற்று கிழமை வாழ்க்கை நிறவு பெற்று இருக்காது.

சண்டே ஸ்பெஷல்! எந்த மீனாக இருந்தாலும் இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்கள்! அசத்தலான மீன் குழம்பு ரெசிபி!
சண்டே ஸ்பெஷல்! எந்த மீனாக இருந்தாலும் இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்கள்! அசத்தலான மீன் குழம்பு ரெசிபி! (Pexel)

தேவையான பொருட்கள் 

அரை கிலோ  மீன்

5 சின்ன வெங்காயம்

1 தக்காளி

1 கப் துருவிய தேங்காய்

2 பச்சை மிளகாய்

1 டேபிள்ஸ்பூன் கடுகு

1 டேபிள்ஸ்பூன் மிளகு

1 டேபிள்ஸ்பூன் வெந்தயம்

1 டேபிள்ஸ்பூன் சீரகம்

3 பல் பூண்டு

சிறிதளவு புளி

2 டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள்

2 டேபிள்ஸ்பூன் மல்லி தூள்

கால் டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள்

கறிவேப்பிலை சிறிதளவு

எண்ணெய் தேவையான அளவு

உப்பு தேவையான அளவு

செய்முறை 

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் அதில் கடுகு, சீரகம், வெந்தயம், மற்றும் மிளகை போட்டு வறுக்கவும். பின்னர் அதனை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் வைத்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.  எண்ணெய் சுட்டதும் அதில் பூண்டை போட்டு அதை வதக்கவும். அடுத்து அதில் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் அதில்  மஞ்சள் தூள், மிளகாய் தூள், அரைத்து வைத்திருக்கும் மசாலா, மற்றும்  மல்லி தூள் சேர்த்து  வரை வதக்கவும்.பிறகு இதை அப்படியே ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் துருவி வைத்திருக்கும் தேங்காய் மற்றும் கால் கப் அளவு தண்ணீர் சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் வைத்து கொள்ளவும்.

இப்பொழுது மீண்டும் ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து சூடக்கவும். எண்ணெய் சுட்டதும் அதில் பச்சை மிளகாயை போட்டு வதக்கி பின்பு அரைத்து வைத்திருக்கும் மசாலா, தேவையான அளவு உப்பு, மற்றும் ஒரு கப் அளவு தண்ணீரை அதில் சேர்த்து நன்கு கலக்கி விடவும். அடுத்து அதில் கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணியை அதனுடன் சேர்த்து நன்கு கிண்டி விட்டு மூடி போட்டு சிறிது நேரம் கொதிக்கவிடவும். குழம்பு கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் கழுவி வைத்திருக்கும் மீனை சேர்த்து பக்குவமாக கிளறி விட்டு மூடி போட்டு சுமார் 5 லிருந்து 7 நிமிடம் வரை வேக விடவும். 7 நிமிடத்திற்கு பிறகு மூடியைத் திறந்து சிறிதளவு கருவேப்பிலை தூவி பக்குவமாக ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும். இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான கேரளா ஸ்டைல் சங்கரா மீன் குழம்பு தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.