Dry Fish Curry: மணக்கும் கருவாட்டு குழம்பு போதும்! ஆயுளுக்கும் ருசி இருக்கும்! அருமையான ரெசிபி!
Dry Fish Curry:தமிழர்கள் எப்போதும் அசைவ உணவிற்கு மிகுந்த விருப்பம் உடையவர்களாக இருக்கின்றனர். அதிலும் நமது கிராமங்களில் சமைக்கப்படும் அசைவு உணவுகளுக்கு என்றுமே தனி மவுசு உண்டு.

தமிழர்கள் எப்போதும் அசைவ உணவிற்கு மிகுந்த விருப்பம் உடையவர்களாக இருக்கின்றனர். அதிலும் நமது கிராமங்களில் சமைக்கப்படும் அசைவு உணவுகளுக்கு என்றுமே தனி மவுசு உண்டு. அந்த அளவிற்கு கிராமத்தில் செய்யப்படும் உணவுகள் வீட்டிலேயே அரைத்து செய்யும் மசாலாக்களை பயன்படுத்தி செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும்.குறிப்பாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் அசைவ உணவு என்றால் கடல் உணவு தான்.
தென்மாவட்டங்களில் அதிகமாக செய்யப்படும் அசைவ உணவுகளில் ஒன்றாக கருவாட்டு குழம்பு உள்ளது. கருவாட்டு குழம்பு ஏழைகளின் சத்துமிக்க ஒரு உணவாகும் இதில் பல சத்துக்களும் இருக்கின்றன. கருவாட்டு குழம்பை யார் வேண்டுமானாலும் செய்யலாம். சிலருக்கு கருவாட்டின் மனம் பிடிப்பதில்லை. சற்று கவுச்சி மனம் அடிப்பதால் அதனை சில தவிர்க்கின்றனர். ஆனால் கருவாட்டில் பல நன்மைகளும் உள்ளன. கருவாட்டின் ருசி மீனின் ருசியை விட அதிகமாக இருக்கும். கிராமத்து ஸ்டைலில் கருவாட்டு குழம்பு செய்வது எப்படி என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
கால் கப் வஞ்சிரம் மீன் கருவாடு
6 கத்திரிக்காய்
2 முருங்கைக்காய்
தேவையான தண்ணீர்
250 மில்லி நல்லெண்ணெய்
1 டீஸ்பூன் கடுகு
அரை டீஸ்பூன் வெந்தயம்
5 பல் பூண்டு
12 முதல் 14 சின்ன வெங்காயம்
ஒரு கொத்து கறிவேப்பில்லை
ஒரு பெரிய வெங்காயம்
ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
2 பச்சை மிளகாய்
3 தக்காளி
கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்
4 டீஸ்பூன் மிளகாய் தூள்
1 கப் புளி கரைசல்
கல் உப்பு
செய்முறை
முதலில் கருவாடுகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் கருவாடு துண்டுகளை போட்டு சிறிது நேரம் அப்படியே விட வேண்டும். பின்னர் ஒரு மண் சட்டியை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, வெந்தயம், பூண்டு, நிறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் போட்ட வெங்காயம் பாதி வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். பின் இதில் தக்காளி மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கிய பின் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கிளறி விடவும்.
அடுத்து இதில் நறுக்கிய கத்திரிக்காய் மற்றும் முருங்கைக்காய் சேர்த்து 5 நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும். அடுத்த இதில் புளிக்கரைசல் மற்றும் தண்ணீர் ஊற்றி கடாயை மூடி 10 நிமிடங்களுக்கு வேக விடவும். காய்கறிகள் வெந்த பின் கருவாடு துண்டுகளை போட்டு மேலும் 15 நிமிடங்களுக்கு கடாயை மூடி கொதிக்கவிடவும். கருவாட்டு குழம்பு தயார். 15 நிமிடங்களுக்கு இதை மூடி வைத்து பின் பரிமாறவும். எளிய மக்களின் ருசியான உணவாக கருவாடு இருந்து வருகிறது. இது போல மண் சட்டியில் செய்யும் போது அது மிகவும் ருசியானதாக இருக்கும்.

டாபிக்ஸ்