கம கமக்கும் கிராமத்து ஸ்டைல் நெத்திலி மீன் குழம்பு! இப்பவே செய்யலாம் ஈசியா!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கம கமக்கும் கிராமத்து ஸ்டைல் நெத்திலி மீன் குழம்பு! இப்பவே செய்யலாம் ஈசியா!

கம கமக்கும் கிராமத்து ஸ்டைல் நெத்திலி மீன் குழம்பு! இப்பவே செய்யலாம் ஈசியா!

Suguna Devi P HT Tamil
Nov 28, 2024 10:12 AM IST

கிராமத்தில் ஓடும் ஓடை மற்றும் ஆறுகளில் இருந்து பிடிக்கும் நெத்திலி மீன் ஒரு அருமையான சுவை கொடுக்க கூடிய மீனாகும். இதில் நிறைய சத்துக்களும் நிறைந்துள்ளன. நெத்திலி மீன் குழம்பை சுவையாக செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.

கம கமக்கும் கிராமத்து ஸ்டைல் நெத்திலி மீன் குழம்பு! இப்பவே செய்யலாம் ஈசியா!
கம கமக்கும் கிராமத்து ஸ்டைல் நெத்திலி மீன் குழம்பு! இப்பவே செய்யலாம் ஈசியா! (Yummy Tummy Aarthi)

தேவையான பொருட்கள்

ஒரு கிலோ நெத்திலி மீன்

தேங்காய் மசாலா விழுது தயாரிக்க

அரை மூடி தேங்காய் 

அரை டீஸ்பூன் சீரகம் 

தேவையான அளவு தண்ணீர்

3 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் 

ஒரு டீஸ்பூன் கடுகு 

அரை டீஸ்பூன் வெந்தயம்

12 முதல் 15 சிறிய வெங்காயம்

2 பச்சை மிளகாய்

1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

1 தக்காளி 

அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் 

3 டீஸ்பூன் மிளகாய் தூள் 

1 டீஸ்பூன் மல்லித்தூள் 

ஒரு எலுமிச்சை அளவுள்ள புளி

சிறிதளவு கறிவேப்பிலை

தேவையான அளவு உப்பு

செய்முறை

 முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தை எடுத்து அதில் நெத்திலி மீனை போட்டு சுத்தமாக கழுவி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இதற்கு தேவையான மசாலாவை அரைக்க வேண்டும். அதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், சீரகம், தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மண்சட்டி அல்லது ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, வெந்தயம், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கீறிய பச்சை  மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். இவை அனைத்தின நிறமும் மாறிய பின்னர் இதில் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட்டை போட வேண்டும். மேலும் இஞ்சி பூண்டு பேஸ்ட் இன் பச்சை பச்சை வாசனை போனதும் அதில் பொடியாக நறுக்கிய தக்காளி மஞ்சள் தூள் மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். 

 இந்த கலவையில் தற்போது கரைத்து வைத்திருக்கும் புளி  கரைசலை சேர்க்கவும். மேலும் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலா விழுதை சேர்த்து கலக்கி விடவும். பின்னர் கறிவேப்பிலை சேர்த்து மூடி போட்டு வைத்து பத்து நிமிடங்கள் வரை அதனை கொதிக்க விடவும். குழம்பு கொதிநிலையை அடைந்தவுடன் நாம் சுத்தம் செய்து வைத்திருந்து நெத்திலி மீனை சேர்க்க வேண்டும். நெத்திலி மீனை கரண்டியால் கிளறாமல் மண் சட்டியை மெதுவாக தூக்கி அசைத்துக் கலக்க வேண்டும். இதை குறைந்தது ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் மூடிய நிலையில் வேக விட வேண்டும். ஐந்து நிமிடங்களுக்கு பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு இறக்கினால் சுவையான நெத்திலி மீன் குழம்பு தயார். இந்த நெத்திலி மீன் குழம்பை மூன்று நாட்களுக்கு மேல் வைத்து சாப்பிடலாம். முதல் நாளை விட அடுத்த இரண்டு நாட்கள் இந்த குழம்பின் சுவை அதிகரிக்கும். 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.