Veld grape Recipe: கெட்ட கொழுப்பை நீக்கும் பிரண்டை துவையல்! செய்றது ரொம்ப ஈசி தான்! இதோ சூப்பர் ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Veld Grape Recipe: கெட்ட கொழுப்பை நீக்கும் பிரண்டை துவையல்! செய்றது ரொம்ப ஈசி தான்! இதோ சூப்பர் ரெசிபி!

Veld grape Recipe: கெட்ட கொழுப்பை நீக்கும் பிரண்டை துவையல்! செய்றது ரொம்ப ஈசி தான்! இதோ சூப்பர் ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Jan 23, 2025 09:50 AM IST

Veld grape Recipe: உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் இந்த பிரண்டை அழிக்கும் திறன் கொண்டது. ஆனால் இந்த பிரண்டையை சமைப்பது என்பது யாருக்கும் தெரியாத ஒன்றாகும். பிரண்டையை வைத்து சுவையான துவையல் செய்ய முடியும். எப்படி சுவையான துவையல் செய்வதை என்பதை இங்கு காணலாம்.

Veld grape Recipe: கெட்ட கொழுப்பை நீக்கும் பிரண்டை துவையல்! செய்றது ரொம்ப ஈசி தான்! இதோ சூப்பர் ரெசிபி!
Veld grape Recipe: கெட்ட கொழுப்பை நீக்கும் பிரண்டை துவையல்! செய்றது ரொம்ப ஈசி தான்! இதோ சூப்பர் ரெசிபி!

தேவையான பொருள்கள்

கால் கப் பிரண்டை

அரை மூடி துருவிய தேங்காய்

 ஒரு எலுமிச்சை அளவுள்ள புளி

தேவையான அளவு உப்பு

1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு

6 வற மிளகாய்

1 டீஸ்பூன் எள்

 சிறிதளவு அச்சு வெல்லம்

1 டீஸ்பூன் மிளகு

 தேவையான அளவு எண்ணெய்

செய்முறை

முதலில் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றமால் மிதமான சூட்டில் எள் போட்டு வறுத்து எடுத்துக்  கொள்ள வேண்டும். இந்த எள் நன்கு ஆறியதும் அதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் வற  மிளகாய், மிளகு, உளுத்தம் பருப்பு ஆகிய இவற்றை எல்லாம் போட்டு நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். இதனையும்  ஆற வைத்து அரைத்த எள் போட்ட மிக்சியில் போட வேண்டும். 

 பிறகு அதே கடாயில் நறுக்கிய பிரண்டையையும் போட்டு ஒரு முறை வதக்கி அதையும் மற்றவைகளுடன் வைத்து தேங்காய், புளி, உப்பு ஆகிய இவற்றை எல்லாம் சேர்த்து அரைக்கவும். இறுதியில் வெல்லத்தையும் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்கு அரைத்து எடுக்க வேண்டும். இதோ இப்போது சுவையான பிரண்டைத் துவையல் தயார். இந்த பிரண்டை துவையலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். நீங்களும் இதை உங்களது வீடுகளில் முயற்சி செய்து பாருங்கள். 

பிரண்டையின் பயன்கள் 

கிராமங்களில் இந்த பிரண்டையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வார்கள். ஏனெனில் இதன் மகத்துவத்தை கிராம மக்களே அறிந்து வைத்துள்ளனர்.  இந்த பிரண்டை எலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியதாகவும், ஈறுகளில் ரத்த கசிவை நிறுத்தும் தன்மை கொண்டதாகவும் உள்ளது. மேலும் வயிற்றில் ஏற்படும் வாயு பிடிப்பை போக்க வல்லதும் ஆகும். உடலின் கெட்ட  கொழுப்பை குறைக்க கூடிய திறன் பிரண்டையில் உள்ளது. இதில் மேலும் பல்வேறு நன்மைகள் உள்ளன. இதனை தினமும் எடுத்துக் கொள்ள உடலுக்கு நல்லது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.