மாலை நேரத்தில் சுட சுட சாப்பிட சூப்பர் ஸ்நாக்ஸ்! வெஜிடபுள் சமோசா ரெசிபி இதோ!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மாலை நேரத்தில் சுட சுட சாப்பிட சூப்பர் ஸ்நாக்ஸ்! வெஜிடபுள் சமோசா ரெசிபி இதோ!

மாலை நேரத்தில் சுட சுட சாப்பிட சூப்பர் ஸ்நாக்ஸ்! வெஜிடபுள் சமோசா ரெசிபி இதோ!

Suguna Devi P HT Tamil
Published Jun 03, 2025 01:54 PM IST

காய்கறிகள் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு அதனை சிற்றுண்டியில் சேர்த்து செய்து கொடுக்கலாம். அதற்கு வெஜிடபுள் சேர்த்து செய்யக்கூடிய சமோசா செய்து கொடுக்கலாம். வீட்டிலேயே வெஜிடபுள் சமோசா செய்வது எப்படி என இங்கு தெரிந்துக் கொள்ளுங்கள்.

மாலை நேரத்தில் சுட சுட சாப்பிட சூப்பர் ஸ்நாக்ஸ்! வெஜிடபுள் சமோசா ரெசிபி இதோ!
மாலை நேரத்தில் சுட சுட சாப்பிட சூப்பர் ஸ்நாக்ஸ்! வெஜிடபுள் சமோசா ரெசிபி இதோ!

தேவையான பொருட்கள்

மாவு தயாரிக்க

மைதா - 2 கப்

உப்பு - 1/2 தேக்கரண்டி

சர்க்கரை - 1 தேக்கரண்டி

ஓமம் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

தண்ணீர்

எண்ணெய்

சமோசா நிரப்ப

உருளைக்கிழங்கு - 6

பட்டாணி - 1/4 கப்

தண்ணீர்

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

முந்திரி பருப்பு

உலர்ந்த திராட்சை

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 3

இஞ்சி - 1 தேக்கரண்டி

கரம் மசாலா - 1 தேக்கரண்டி

சாட் மசாலா - 1 தேக்கரண்டி

உப்பு - 1/2 தேக்கரண்டி

கொத்துமல்லி தழை

எண்ணெய்

செய்முறை

வெஜ் சமோசா செய்வதற்கு முதலில் மாவு பிசைய வேண்டும். அதற்க்கு ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சிறிதளவு உப்பு, சர்க்கரை, ஓமம், எண்ணெய் சேர்த்து நன்கு பிசையவும். இந்த மாவில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும் மாவு நன்கு பிசைந்த பின்பு மாவில் எண்ணெய் தடவி ஒரு மணி நேரம் மூடிவைக்கவும். சமோசா நிரப்புவதற்கு குக்கரில் உருளைகிழங்கு. பச்சை பட்டாணி சேர்த்து வேகவைத்து நறுக்கி வைக்கவும். அடுத்து ஒரு கடாயில் எண்ணெய், சீரகம், முந்திரி பருப்பு, உலர் திராட்சை, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்

வெங்காயம் பொன்னிறமானவுடன் வேகவைத்து நறுக்கிய உருளைகிழங்கு, வேகவைத்த பச்சை பட்டாணி சேர்த்து நன்கு மசிக்கவும். உருளைகிழங்கு நன்கு மசித்தவுடன் கரம் மசாலா தூள், தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கிளறி நன்கு ஆறவிடவும். சமோசா செய்வதற்கு பிசைந்து வைத்த மாவில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக பிரித்து கொள்ளவும். அந்த உருண்டைகளை நன்கு நீள் வடிவிற்க்கு தேய்த்து இரண்டாக நறுக்கி கூம்பு வடிவத்தில் மடித்து உருளைகிழங்கு மசாலாவை வைத்து தண்ணீர் தொட்டு அதன் ஓரங்களை ஒட்டவும். இறுதியாக ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து செய்து வைத்த சமோசாவை மிதமான வெப்பநிலையில் நன்கு வேகும் வரை பொரிக்கவும். சூடான மற்றும் அனைவருக்கும் பிடித்தமான வெஜ் சமோசா தயார். இந்த சமோசாவை புதினா சட்டினியுடன் பரிமாறவும்.