Vegetable Koottu: கமகமக்கும் காய்கறி கூட்டு செய்யத் தெரியுமா? இதோ இப்பவே தெரிஞ்சுக்கோங்க! பக்கா ரெசிபி!
Vegetable Koottu: காய்கறிகளை வைத்து பல விதமான உணவுகள் சமைக்கப்படுகின்றன. ஆனால் பல காய்கறிகளை சேர்த்து சுவையான கமகமக்கும் கூட்டு ஒன்று செய்யலாம். இந்த வகை காய்கறி கூட்டு செய்வதற்கு 30 நிமிடங்களே போதுமானது இந்த புது விதமான காய்கறி கூட்டு எப்படி செய்வது என்பதை இங்கு காண்போம்.

நாம் சாப்பிடும் ஒவ்வொரு விதமான காய்கறிகளிலும் ஒவ்வொரு விதமான ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. இது போன்ற காய்கறிகளை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு உணவு முறையும் காய்கறியின் மகத்துவத்தை அறிந்த ஒரு சமையல் முறையாகும். எனவே நமது உணவில் காய்கறிகள் முதன்மையான இடத்தை பிடிக்கின்றன. காய்கறிகளை வைத்து பல விதமான உணவுகள் சமைக்கப்படுகின்றன. ஆனால் பல காய்கறிகளை சேர்த்து சுவையான கமகமக்கும் கூட்டு ஒன்று செய்யலாம். இந்த வகை காய்கறி கூட்டு செய்வதற்கு 30 நிமிடங்களே போதுமானது இந்த புது விதமான காய்கறி கூட்டு எப்படி செய்வது என்பதை இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்
1 கேரட்
1 உருளை கிழங்கு
10 பீன்ஸ்
ஒரு பெரிய சைஸ் காலிஃபிளவர்
கால் கப் பச்சை பட்டாணி
கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்
4 பச்சை மிளகாய்
5 முதல் 7 சின்ன வெங்காயம்
1 டீஸ்பூன் சீரகம்
அரை கப் தேங்காய் துருவல்
1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
தேவையான அளவுஉப்பு
1 டீஸ்பூன் எண்ணெய்
அரை டீஸ்பூன் கடுகு
அரை டீஸ்பூன் சீரகம்
2 வற மிளகாய்
ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை
செய்முறை
முதலில் கூட்டு வைக்க தேவையான அனைத்து காய்கறிகளையும் எடுத்து நன்கு கழுவி,பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து கலந்து வேக வைக்க வேண்டும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய்,சீரகம், பச்சை மிளகாய், வெங்காயம்,அரிசி மாவு சேர்த்து,கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். முன்னதாக வேக வைத்த காய்கறிகளை பாதி அளவு மட்டும் வேக வைத்து எடுக்க வேண்டும்.
பின்னர் இதனை மீண்டும் அடுப்பில் வைத்து நாம் அரைத்து வைத்திருந்த தேங்காய் விழுதை சேர்த்து தேவையான அளவு உப்பு,தண்ணீர் சேர்த்து கலந்து மூடி பச்சை வாசம் போகும் வரை வேக வைக்க வேண்டும். இப்பொழுது காய்கறிகள் உடன் நாம் சேர்த்துள்ள தேங்காய் விழுதுடன் சேர்ந்து மீதி பாதியும் வெந்து நல்ல மனத்துடன் கூட்டு தயாராகிவிடும். இவ்வாறு தயாரான கூட்டை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைக்க வேண்டும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் அவைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, சீரகம், வற்றல், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். இந்த தாளித்த பொருளை நாம் வைத்திருந்த கூட்டு கலவையில் சேர்க்க வேண்டும். இப்போது மிகவும் சுவையான, சத்தான காய்கறி கலவை கூட்டு சுவைக்கத் தயார்.இது சாப்பிடுவாதற்கும் மிகுந்த சுவையுடன் இருக்கும். இதனை உங்களது வீடுகளில் ட்ரை பண்ணி பார்த்து சாப்பிட்டு மகிழுங்கள். இது போன்ற வித்தியாசமான சமையல் வகைகளை செய்து தரும் போது தான் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவதை வழக்கம் ஆக்குவார்கள்.

டாபிக்ஸ்