Veg Momos: இனி ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு வெரைட்டியான வெஜ் மோமோஸ் இருக்கே! சூப்பரா செஞ்சு அசத்தலாம்!
Veg Momos:பெரும் அளவு பிரபலமான வகைகள் மீது நமக்கு தனிப்பிரியம் ஏற்படுகிறது. சமீபத்தில் அவ்வாறு வந்த ஒரு உணவு வகை தான் மோமோஸ், இது வேறு நாட்டில் இருந்து வந்தாலும் அனைவருக்கும் பிடித்த உணவாக இது மாறிவிட்டது. சிம்பிளாக வெஜ் மோமோஸ் செய்வது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.

மாலை நேரம் வந்து விட்டாலே ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்பது எழுதப்படாத ஒரு விதியாகி விட்டது. ஆனால் நாம் வழக்கமாக சாப்பிடும் ஸ்நாக்ஸ்களை விட புது விதமாக இருக்கும் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என எல்லாருக்கும் ஒரு ஆசை இருக்கும். அதிலும் இப்போது பெரும் அளவு பிரபலமான வகைகள் மீது நமக்கு தனிப்பிரியம் ஏற்படுகிறது. சமீபத்தில் அவ்வாறு வந்த ஒரு உணவு வகை தான் மோமோஸ், இது வேறு நாட்டில் இருந்து வந்தாலும் அனைவருக்கும் பிடித்த உணவாக இது மாறிவிட்டது. சிம்பிளாக வெஜ் மோமோஸ் செய்வது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
1 கப் மைதா மாவு
1 பெரிய வெங்காயம்
1 குடை மிளகாய்
2 கேரட்
5 to 6 பீன்ஸ்
சிறிய முட்டைகோஸ்
2 பல் பூண்டு
1 துண்டு இஞ்சி
1 டேபிள்ஸ்பூன் மிளகு தூள்
1 டேபிள்ஸ்பூன் வினிகர்
1 டேபிள்ஸ்பூன்சோயா சாஸ்
சிறிதளவு கொத்தமல்லி
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் மைதா மாவு, சிறிதளவு உப்பு, எண்ணெய், மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பின்பு மூடி வைக்கவும். அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும். எண்ணெய் சுட்டதும் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும். பின்னர் அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து வதக்கவும். அதில் நறுக்கிய குடை மிளகாய், கேரட், முட்டைகோஸ், மற்றும் பீன்ஸை போட்டு அதை நன்கு கலந்து விட்டு அதை வதக்கவும். பின்பு அதில் மிளகாய் தூள், வினிகர், சோயா சாஸ், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு வேக விடவும்.
பின்னர் அதில் சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி அதை சிறிது நேரம் ஆற விடவும். அடுத்து ஊற வைத்திருக்கும் மாவை எடுத்து அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். இப்பொழுது சப்பாத்தி கல்லில் ஒவ்வொரு உருண்டைகளாக வைத்து சப்பாத்திக்கு தேய்ப்பது போல் தேய்த்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு செய்து வைத்திருக்கும் ஸ்டப்பிங்கை வைக்கவும். ஸ்டப்பிங்கை வைத்த பின் அவரவருக்கு பிடித்தமான வடிவில் மோமோஸ்ஸை மடித்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். பின்பு இட்லி தட்டை எடுத்து அதில் எண்ணெய்யை தடவி இந்த மோமோஸ்ஸை அதில் வைக்கவும். அடுத்து இட்லி அவிக்கும் பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இட்லி தட்டை வைத்து மூடி போட்டு சுமார் 8 லிருந்து 10 நிமிடம் வரை அதை வேக விடவும். அடுப்பை அணைத்து விட்டு மூடியை திறந்து மோமோஸ்ஸை எடுத்து சுட சுட பரிமாறவும்.

டாபிக்ஸ்