தோசை இட்லி இனி எதுவானாலும் இது போதும்! வாய் ஊறவைக்கும் வடகறி இருக்கே! சட்டுனு செய்யலாம்! இதோ மாஸ் ரெசிபி!
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல பிரபலமான உணவுகள் உள்ளன. தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் இங்கு வந்து வாழ்வதால் வடகறியை அனைவரும் கேள்வி பட்டிருப்பீர்கள். காலை எழுந்ததும் இடியாப்பம் வடகறி என விற்றுக் கொண்டு செல்லும் சத்தம் கேட்காமல் இருக்காது.
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல பிரபலமான உணவுகள் உள்ளன. தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் இங்கு வந்து வாழ்வதால் வடகறியை அனைவரும் கேள்வி பட்டிருப்பீர்கள். காலை எழுந்ததும் இடியாப்பம் வடகறி என விற்றுக் கொண்டு செல்லும் சத்தம் கேட்காமல் இருக்காது. இந்த வடகறியை இட்லி, தோசை, இடியாப்பம் என பல வித உணவுகளோடு சேர்ந்து சாப்பிடலாம். இந்த வடகறியை செய்யும் முறையும் மிகவும் எளிதானது ஆகும். இதனை தெரிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
தேவையான பொருட்கள்
அரை கப் கடலைப்பருப்பு
3 முதல் 4 வற மிளகாய்
2 டீஸ்பூன் சோம்பு
3 டீஸ்பூன் எண்ணெய்
2 பிரியாணி இலை
5 கிராம்பு
1 பட்டை
2 ஏலக்காய்
1 அன்னாசிப்பூ
2 பெரிய வெங்காயம் - நறுக்கியது
5 முதல் 6 பச்சை மிளகாய்
2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
கைப்பிடி அளவு கறிவேப்பிலை
2 தக்காளி
தேவையான அளவு உப்பு
அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
2 டீஸ்பூன் மிளகாய் தூள்
2 டீஸ்பூன் மல்லித் தூள்
2 கப் தண்ணீர்
கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை
செய்முறை
முதலிள் கடலைப் பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து பின்பு மூழ்கும் படி தண்ணீர் சேர்த்து ஊற வைக்க வேண்டும். மேலும் இதில் வற மிளகாய், சோம்பு ஆகியவற்றையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது 2 மணி நேரத்திற்கு பின்னர் இந்த ஊற வைத்த அனைத்தையும் ஒரு மிக்சியில் போட்டு மொறு மொறுப்புடன் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் பருப்பு கலவை மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் உதிரி உதிரியாக வரும் வரை வறுக்கவும்.
பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் பிரியாணி இலை, கிராம்பு, பட்டை, ஏலக்காய், சோம்பு, அன்னாசிப்பூ சேர்த்து கலந்து விடவும்.மேலும் இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வரை வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக மாறியவுடன் அதில் கீறிய பச்சை மிளகாய், இஞ்சி தக்காளி ஆகியவற்றை போட்டு வதக்கவும். இவை அனைத்தும் வெந்தவுடன் அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் ஆகியவற்றை சேர்த்து கலந்து விடவும். அடுத்து இதற்குத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து விட வேண்டும். இந்த தண்ணீர் நன்கு காய்ந்து கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் வறுத்த பருப்பு கலவையை சேர்த்து கலந்து விட வேண்டும். பின் இந்த கடாயை மூடி 10 நிமிடம் வரை வேகவைக்க வேண்டும். இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும். இப்பொழுது சுவையான வட கறி தயார்.
டாபிக்ஸ்