குழந்தைகளுக்கு சத்தான ஒரு மதிய உணவு ரெசிபி வேண்டுமா? அப்போ உளுந்து சாதம் சரியான தேர்வு! இதோ ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  குழந்தைகளுக்கு சத்தான ஒரு மதிய உணவு ரெசிபி வேண்டுமா? அப்போ உளுந்து சாதம் சரியான தேர்வு! இதோ ரெசிபி!

குழந்தைகளுக்கு சத்தான ஒரு மதிய உணவு ரெசிபி வேண்டுமா? அப்போ உளுந்து சாதம் சரியான தேர்வு! இதோ ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Published Jun 06, 2025 11:36 AM IST

உணவில் அடிக்கடி உளுந்து சேர்த்துக் கொள்வது பல பலன்களை அளிக்கிறது. உளுந்தினை வைத்து இட்லி, தோசை மட்டுமல்ல சுவையான உளுந்து சாதம் செய்யலாம். உளுந்து சாதம் செய்வது எப்படி என்பதை இங்கு தெரிந்துக் கொள்ளுங்கள்.

குழந்தைகளுக்கு சத்தான ஒரு மதிய உணவு ரெசிபி வேண்டுமா? அப்போ உளுந்து சாதம் செய்வது எப்படி?
குழந்தைகளுக்கு சத்தான ஒரு மதிய உணவு ரெசிபி வேண்டுமா? அப்போ உளுந்து சாதம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

அரிசி - ஒரு கப்

உளுந்து - கால் கப்

வெந்தயம் - கால் தேக்கரண்டி

தேங்காய் பால் - 4 1/2 கப்

பூண்டு பல் - 15

உப்பு - தேவையான அளவு

தாளிக்க தேவையானவை:

கடுகு - கால் தேக்கரண்டி

உளுந்தம்பருப்பு - அரை தேக்கரண்டி

இஞ்சி (தட்டியது) - 1 அங்குல துண்டு

கறிவேப்பிலை - சிறிது

பெருங்காயம் - சிறிதளவு

காய்ந்த மிளகாய் - 2

எண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

பொன்னி அரிசி இல்லாமல் சற்று பருமனாக உள்ள அரிசியை ( இட்லி அரிசி சம்பா அரிசி) எடுத்து கழுவி ஊற வைத்துக் கொள்ளவும். உளுந்து மற்றும் வெந்தயத்தை வெறும் வாணலியில் எண்ணெய் இல்லாமல் வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். சிவக்க தேவையில்லை. அதே வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து வைத்துக் கொள்ளவும்.

தம் போட்டு செய்வது ருசியாக இருக்கும் அதனால் குக்கரில் அரிசி, வறுத்த உளுந்து, வெந்தயம், தேங்காய் பால், பூண்டு, உப்பு, தாளித்தவை அனைத்தையும் போட்டு வேக விடவும். மூடி போடாமல் இடையிடையே கிண்டி கொள்ளவும். அரிசி முக்கால் பாகம் வெந்ததும் குக்கர் மூடியை போட்டு வெயிட் போடாமல் 5 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.