காலை லேட் ஆகிருச்சா? இரு வேளைக்கும் சேர்த்து சாப்பிட துவரம் பருப்பு சாதம் செய்யலாமே! சட்டுனு செய்ய அருமையான ரெசிபி இதோ!
காலை நேரத்தில் தாமதமாக எழுந்து விட்டீர்களா? உடனடியாக சமையல் செய்வது கடினமாக இருக்கும். இது போன்ற சூழ்நிலைகளில் துவரம் பருப்பு சாதம் இருக்கே. ரொம்ப ஈசிதான். இதனை காலை மற்றும் மதிய என இரு வேளைகளிலும் சாப்பிடலாம். துவரம் பருப்பு சாதம் எப்படி செய்வது என்பதை தெரிஞ்சுக்க இதனை முழுமையாக படியுங்கள்.

நான் காலையில் எழுந்தவுடன் வேகமாக காலை மற்றும் மதிய நேரத்திற்கு சமைப்பது பெரும்பாடாக இருந்து வருகிறது. சில சமயங்களில் காலையில் நாம் தாமதமாக எழுந்து விட்டால் அன்றைய சமையல் மிகவும் தாமதமாகிவிடும். சில சமயங்களில் கடைகளில் சென்று வாங்கி வர வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனை தவிர்ப்பதற்காக காலை மற்றும் மதியம் என இரண்டு வேளைகளிலும் சாப்பிடக்கூடிய உணவுகளை செய்தால் அது சரியானதாக இருக்கும். அப்படி ஒரு சிறந்த உணவு தான் துவரம் பருப்பு சாதம். இதனை காலை உணவாகவும் சாப்பிடலாம். மதிய உணவிற்கும் கொடுத்து விடலாம். வீட்டில் இருக்கும் மிக்ஸர் அல்லது காராசேவு இதற்கு இணை உணவாக வைத்து சாப்பிடலாம். துவரம் பருப்பு சாதம் செய்வது மிகவும் எளிமையான ஒன்றுதான். இதனைஎப்படி செய்வது என இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்
அரை கப் துவரம் பருப்பு
ஒரு கப் புழுங்கல் அரிசி
6 வற மிளகாய்
சிறிதளவு புளி
அரை கப் துருவிய தேங்காய்
தேவையான அளவு நல்லெண்ணெய்
தேவையான அளவு உப்பு
6 சின்ன வெங்காயம் உரித்தது
ஒரு சிட்டிகை பெருங்காயத் தூள்
ஒரு டீஸ்பூன் சீரகம்
ஒரு டீஸ்பூன் கடுகு
ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை
செய்முறை
முதலில் துவரம் பருப்பினை பிரஷர் குக்கரில் நன்கு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் நெல்லிக்காய் அளவு புளியை நன்றாக ஊறவைத்து பின் அந்தக் கரைசலை தனியாக எடுத்துக்கொள்ளவும். இப்பொழுது ரைஸ் குக்கரில் அரை கப் அளவுள்ள பொன்னி புழுங்கல் அரிசி அளவிற்கு மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். அதன் பின் அந்த சாதம் மூன்றில் இரண்டு பங்கு வெந்தவுடன் அதில் கரைத்து வைத்த புளிக்கரைசலுடன், 6 சிவப்புமிளகாய் வற்றல் அதனுடன் மூன்று தோலுரித்த சின்ன வெங்காயம், இவற்றை மிக்சியில் அரைத்து எடுத்து இதை அந்த புளிக்கரைசலோடு சேர்த்துக் கலந்து, பின்புஇதனுடன் மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள், சாதத்திற்குத் தேவையான அளவு உப்பு கலந்து ரைஸ் குக்கரில் உள்ள முக்கால்பாகம் வெந்துள்ள சாதத்துடன் கலக்கவும்.
இது நன்றாக கொதித்து வற்றிய பின்பு தனியாக மிக்சியில் கால் முறி தேங்காய்த்தூள்,மூன்று தோலுரித்த சின்ன வெங்காயம், சீரகம் சிறிதளவு இவற்றை மிகவும் நைசாக அரைத்து அந்த விழுதை சாதத்துடன் ஊற்றி கருவேப்பிலை சிறிதளவு கிள்ளிப்போட்டு, நல்லெண்ணெய் ஊற்றிக் சாப்பிடும் பக்குவத்திற்கு சாதம் வரும் வரை கிண்டிக்கொண்டே வரவும். இதன்பிறகு அடுப்பில் கடாயை வைத்து, சூடானவுடன் அதில் நல்லெண்ணெய் ஊற்றி அது சூடானவுடன் அதில் கடுகு, காய்ந்த மிளகாய் ஒன்று, உடைத்த உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை சிறிதளவு இவற்றையும் போட்டு நன்கு வதங்கி பொரிந்தவுடன் இதனை குக்கரில் உள்ள துவரம் பருப்பு சாதத்தினில் ஊற்றி ரைஸ் குக்கரை அணைத்துவிட்டு வேறு ஒரு பாத்திரத்திற்கு இதை மாற்றியபின் பரிமாறிடவும்.இப்போது சுவையான துவரம் பருப்பு சாதம் தயார்.

டாபிக்ஸ்