சுட சுட சாதத்துடன் இந்த தக்காளி கடையலை சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்! இதோ ஈசி ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சுட சுட சாதத்துடன் இந்த தக்காளி கடையலை சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்! இதோ ஈசி ரெசிபி!

சுட சுட சாதத்துடன் இந்த தக்காளி கடையலை சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்! இதோ ஈசி ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Published Jun 16, 2025 11:40 AM IST

காலையில் இருக்கும் பரபரப்பான சமயத்தில் சுவையான மற்றும் எளிதாக செய்யக் கூடிய குழம்பு ரெசிபி வேண்டும். இன்று பேச்சிலர்கள் முதல் பேமிலி வரை உடனடியாக செய்யக்கூடிய குழம்பு வேண்டும் என்றால் சுவையான தக்காளி கடையல் குழம்பு இருக்கே. இன்று இதன் செய்முறையை தெரிந்துக் கொள்ளுங்கள்.

சுட சுட சாதத்துடன் இந்த தக்காளி கடையலை சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்! இதோ ஈசி ரெசிபி!
சுட சுட சாதத்துடன் இந்த தக்காளி கடையலை சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்! இதோ ஈசி ரெசிபி!

தேவையான பொருட்கள்

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் - 20

பூண்டு - 6 பற்கள்

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பில்லை

தக்காளி - 4

கல்லுப்பு - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

சாம்பார் தூள் - 1 தேக்கரண்டி

தனியா தூள் - 1 தேக்கரண்டி

பெருங்காயத்தூள்

தண்ணீர் - 1 1/2 கப்

அரிசி மாவு - 1 தேக்கரண்டி

கொத்தமல்லி இலை நறுக்கியது

செய்முறை

முதலில் ஒரு குக்கரில், எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடானதும், உளுத்தம் பருப்பு, கடுகு மற்றும் சீரகம் சேர்க்கவும். கடுகு பொரிந்ததும், நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். இடித்த பூண்டு சேர்த்து வறுக்கவும்.  பிறகு பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். நறுக்கிய தக்காளி சேர்த்து ஒன்றாக கலக்கவும். கல் உப்பு, மிளகாய் தூள், சாம்பார் தூள், மல்லி தூள் மற்றும் பெருங்காய தூள் சேர்க்கவும்.

சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.  குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேக விடவும். அரிசி மாவுடன் சிறிது தண்ணீர் கலந்து தனியாக வைக்கவும். குக்கரை திறந்து தக்காளியை மசிக்கவும்.  அடுப்பை அணைத்து, அரிசி மாவை குழம்புடன் சேர்க்கவும்.  நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலக்கவும்.  சுவையான தக்காளி கடையல் நன்றாகவும் சூடாகவும் பரிமாற தயாராக உள்ளது.