Tirunelveli Halwa: நெய் சொட்ட சொட்ட செய்யலாம்! திருநெல்வேலி அல்வா செய்வது எப்படி? இதோ மாஸ் ரெசிபி!
Tirunelveli Halwa: பல விதமான பெருமைகளை கொண்ட ஒரு ஊர் தான் திருநெல்வேலி. இந்த திருநெல்வேலி என சொன்னதும் அனைவரது மனதிலும் வரும் ஒரு விஷயம் என்னவென்றால் அது தான் அல்வா, இந்த அல்வா மிகவும் சுவையானதாகவும் இருக்கும். இந்த அல்வா மிகவும் சிறிய கடையில் நிறைந்த சுவையுடன் தயாரிக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வித பெருமை உண்டு. அந்த பெருமைகளில் ஒன்றாக அந்த ஊரின் பிரபல உணவு வகைகள் இருந்து வருகிறது. அந்த அளவிற்கு தமிழர்கள் உணவின் மீதும் மிகுந்த பற்று உள்ளது. அந்த வரிசையில் பல விதமான பெருமைகளை கொண்ட ஒரு ஊர் தான் திருநெல்வேலி. இந்த திருநெல்வேலி என சொன்னதும் அனைவரது மனதிலும் வரும் ஒரு விஷயம் என்னவென்றால் அது தான் அல்வா, இந்த அல்வா மிகவும் சுவையானதாகவும் இருக்கும். இந்த அல்வா மிகவும் சிறிய கடையில் நிறைந்த சுவையுடன் தயாரிக்கப்படுகின்றன. இப்போது உங்கள் வீட்டிலேயே சுவையான திருநெல்வேலி அல்வா செய்யலாம். சுவையான அல்வா செய்யும் முறையை தெரிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
தேவையான பொருட்கள்
கால் கிலோ சம்பா கோதுமை
ஒரு கிலோ சர்க்கரை
20 முதல் 25 முந்திரி
4 ஏலக்காய்
10 பாதாம்
200 கிராம் நெய்
கால் டீஸ்பூன் கலர் பவுடர்
செய்முறை
முதலில் சம்பா கோதுமையை 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர மற்றொரு பாத்திரத்தில் பாதாமை 15 நிமிடம் ஊற வைத்து தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்துக் கொள்ளவும். இப்பொழுது ஊற வைத்த கோதுமையை எடுத்து தண்ணீரை வடித்து விட்டு கிரைண்டரில் போட்டு அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். அரைத்தவற்றை பிழிந்து பால் எடுத்துக் கொள்ளவும். மீண்டும் கிரைண்டரில் போட்டு அரை கப் தண்ணீர் சேர்த்து அரைத்து பால் எடுக்கவும். இதே போல் கோதுமை நிறம் மாறி சக்கையாகும் வரை 2 முறை அரைத்து பால் எடுத்து ஒரு மணி நேரம் தெளிய வைக்கவும். ஊற வைத்து தோல் உரித்த பாதாமை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். அதன் பிறகு தெளிய வைத்திருக்கும் அரைத்த பாலை எடுத்து மேலே தேங்கி இருக்கும் தண்ணீரை மட்டும் மேலாக வடித்து எடுத்து விடவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடாக்கவும். நெய் சூடானதும் அதில் முந்திரி பருப்பை போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அதே கடாயில் 2 கப் தண்ணீர் ஊற்றி சீனியை போட்டு கரைய விடவும். லேசான கம்பி பதம் வரும் வரை கொதிக்க விடவும். பாகாக மாறியதும் அதனுடன் அரைத்து வடிகட்டிய மாவை ஊற்றி கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். அதன் பிறகு அதில் கலர் பவுடர் மற்றும் அரைத்த பாதமை போட்டு 1 கிளறி விடவும். சில நிமிடங்கள் கழித்து மேலே நெய் ஊற்றி மேலும் கிளறி ஏலக்காய் பொடியை போட்டு மீண்டும் கிளறி விட வேண்டும். அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் நெய் வெளியே வந்ததும் நன்கு ஒரு முறை கிளறி விட்டு இறக்கி விடவும். தட்டில் முழுவதும் நெய் தடவி அதில் அல்வாவை கொட்டி நன்கு பரப்பி விட்டு வறுத்த முந்திரியை மேலே தூவி ஆற விடவும். நன்கு ஆறியதும் கத்தியில் நெய் தடவிக் கொண்டு துண்டுகளாக வெட்டவும் சுவையான திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா ரெடி.

டாபிக்ஸ்