வாயில் வைத்தாலே கரையும் மைசூர் பாக் செய்யத் தெரியுமா? இன்னைக்கே தெரிஞ்சுக்கோங்க! அருமையான ரெசிபி இதோ!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வாயில் வைத்தாலே கரையும் மைசூர் பாக் செய்யத் தெரியுமா? இன்னைக்கே தெரிஞ்சுக்கோங்க! அருமையான ரெசிபி இதோ!

வாயில் வைத்தாலே கரையும் மைசூர் பாக் செய்யத் தெரியுமா? இன்னைக்கே தெரிஞ்சுக்கோங்க! அருமையான ரெசிபி இதோ!

Suguna Devi P HT Tamil
Published Mar 26, 2025 06:37 PM IST

இந்தியாவில் பிரபலமான இனிப்புகளில் ஒன்றான மைசூர் பாக் ஒரு சுவையான இனிப்பாகும். இதனை சாப்பிடும் போது மிகவும் தித்திப்பாக இருக்கும். இனி மைசூர்பாக் சாப்பிட வேண்டும் என்றால் கடைகளுக்கு செல்ல வேண்டாம். சுவையான மைசூர்பாகினை வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.

வாயில் வைத்தாலே கரையும் மைசூர் பாக் செய்யத் தெரியுமா? இன்னைக்கே தெரிஞ்சுக்கோங்க! அருமையான ரெசிபி இதோ!
வாயில் வைத்தாலே கரையும் மைசூர் பாக் செய்யத் தெரியுமா? இன்னைக்கே தெரிஞ்சுக்கோங்க! அருமையான ரெசிபி இதோ!

தேவையான பொருட்கள்

1 கப் கடலை மாவு

அரை கப் நெய்

ஒரு கப் சர்க்கரை

ஒரு கப் தண்ணீர்

செய்முறை

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றாமல் வெறும் கடலை மாவை மட்டும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை மிதமான தீயில் 10 நிமிடம் வறுக்க வேண்டும். பின்னர் வறுத்த கடலை மாவை ஒரு பெரிய பாத்திரத்தில் சலித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய்யை ஊற்றி உருக்கி எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது உருக்கிய நெய்யில் பாதியை சலித்து வைத்துள்ள கடலை மாவில் ஊற்றி கட்டி வராதவாறு கலக்கவும். பின்னர் மைசூர் பாக் செய்யும் தட்டின் எல்லாப் பக்கங்களிலும் நெய் தடவி தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி அதில் சர்க்கரை சேர்த்து கரையும் வரை நன்கு காய்ச்ச வேண்டும். அடுத்து சர்க்கரை கரைந்தவுடன் அதனுடன் நாம் செய்து வைத்திருந்த கடலை மாவு மற்றும் நெய் கலவையை ஊற்றி கிளறவும். இதனை மிதமான தீயில் வைத்து கலக்க வேண்டும். சிறிது கெட்டியானதும் படிப்படியாக நெய்யை சேர்த்து, தொடர்ந்து கலந்து கொண்டே 10 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும். பின்பு மைசூர் பாக் திரண்டு வந்ததும் நெய் தடவிய தட்டிற்கு மாற்றவும். மேலே நெய் தடவி 2 மணி நேரம் ஆற விடவும். ஆறியவுடன் டின்னில் இருந்து எடுத்து விரும்பிய வடிவில் வெட்டி நெய் மைசூர் பாக்கை பரிமாறவும். இதனை வாயில் வைத்தாலே கரையும் அளவிற்கு மென்மையாக இருக்கும். நீங்களும் இதனை முயற்சி செய்து பாருங்கள்.

Suguna Devi P

TwittereMail
சுகுணா தேவி பி, 2019 ஆம் ஆண்டு முதல் ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் ஆங்கில இலக்கியத் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். 5 ஆண்டுகளுக்கும் மேல் அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் ஆகும். இவர் கடந்த 2024 செப்டம்பர் மாதம் முதல் தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் தேசம், லைப்ஸ்டைல், சினிமா மற்றும் உலகம் தொடர்பான செய்திகளில் தனது பங்களிப்பை அளித்து வருக்கிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.