Tamrind Rice: கோவில் ஸ்டைலில் புளி சாதம் சாப்பிட ரெடியா? இதோ இப்படி பண்ணி பாருங்க!
Tamrind Rice: நாம் வீடுகளில் செய்யப்படும் புளிசாதத்தை விட கோயில்களில் தரப்படும் புளியோதரை மிகவும் ருசியானதாக இருக்கும். ஆனால் அந்த ருசிக்கு நம்மால் செய்ய முடியாது. அதற்கு காரணம் அவர்களது ஸ்பெஷல் ரெசிபியே ஆகும். இப்போது கோவில் ஸ்டைலில் புளி சாதம் செய்வது எப்படி என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நாம் வீட்டில் எவ்வளவு ருசியாக செய்தாலும் நம் வீட்டில் உள்ளவர்களுக்கு வெளியில் வாங்கும் சாப்பாட்டை மிகவும் பிடித்தது போகிறது. அதுவும் கோயில்களில் தரப்படும் பிரசாதம் என்றால் அனைவருக்கும் ஒரு தனிப்பிரியம் உண்டு. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட கோயில் பிரசாதம் என்றால் முண்டியடித்துக் கொண்டு வாங்குவார்கள். அந்த வகையில் கோயில்களில் போடப்படும் ஒரு முக்கியமான பிரசாதமாக இருப்பது புளிசாதம் ஆகும். இந்த புளி சாதம் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கேரளா என அனைத்து மாநிலங்களிலும் உள்ள கோயில்களிலும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. நாம் வீடுகளில் செய்யப்படும் புலி சாதங்களை விட கோயில்களில் தரப்படும் புளியோதரை மிகவும் ருசியானதாக இருக்கும். ஆனால் அந்த ருசிக்கு நம்மால் செய்ய முடியாது. அதற்கு காரணம் அவர்களது ஸ்பெஷல் ரெசிபியே ஆகும். இப்போது கோவில் ஸ்டைலில் புளி சாதம் செய்வது எப்படி என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். ரெசிபியை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
தேவையான பொருட்கள் :
2 கப் பச்சரிசி
ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு புளி
3 வற மிளகாய்
2 பச்சை மிளகாய்
அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
ஒரு டீஸ்பூன் பெருங்காயத் தூள்
10 முதல் 12 சின்ன வெங்காயம்
தேவையான அளவு எண்ணெய்
கால் கப் வேர்க்கடலை
1 டீஸ்பூன் எள்
1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
1 டீஸ்பூன் கடலைப்பருப்பு
2 டீஸ்பூன் வெந்தயம்
4 முந்திரிபருப்பு
ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை -
செய்முறை :
முதலிள் புளியை கரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றாமல் எள்ளை போட்டு வறுத்து அதை மிக்சியில் போட்டு அரைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் அடிக்கில் காய்ந்ததும் பெருங்காயத்தைச் சேர்த்து பின் வற மிளகாயை சேர்த்து வதக்கி விட வேண்டும். இந்த வற மிளகாய் கருப்பாக வருமாறு வதங்கியதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போடவும். அதன் பிறகு கரைத்த புளியை ஊற்றவும். பின் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த புளிச்சாறு கொதித்து கெட்டியாகும் வரை கலக்கி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். மேலும் இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, வேர்க்கடலையை சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். முன்னதாக அரிசியை சட்டியில் போட்டு உதிரியாக வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் உதிர்த்த சாதத்தை புளிச்சாறுடன் சேர்த்து, தாளிக்க வேண்டிய பொருட்களை எண்ணையில் வறுத்து இதன் மீது ஊற்றவும். தேவையான உப்பு, வறுத்துப் பொடித்த மிளகாய்ப் பொடி சேர்த்து கலக்கி பரிமாறலாம். இதனுடன் உருளைக்கிழங்கு, மசால் வடை, புதினா துவையல் சேர்த்து சாப்பிடலாம். இந்த புளி சாதம் கோவில்களில் போடப்படும் சுவையான பிரசாதமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த புளி சாதத்தை சாப்பிடலாம்.

டாபிக்ஸ்