Potato Samosa: சுட சுட டீக்கடை சமோசா! நீங்களும் செய்யலாம்! இதோ சிம்பிள் ரெசிபி!-how to prepare tea shop samosa in home - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Potato Samosa: சுட சுட டீக்கடை சமோசா! நீங்களும் செய்யலாம்! இதோ சிம்பிள் ரெசிபி!

Potato Samosa: சுட சுட டீக்கடை சமோசா! நீங்களும் செய்யலாம்! இதோ சிம்பிள் ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Oct 02, 2024 05:48 PM IST

Potato Samosa: நமது ஊர்களில் டீக்கடைகளில் விற்கப்படும் வடை, சமோசாவிற்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளம் உண்டு.எப்போதும் இந்த உணவு வகைகள் நியாயமான விலையில் சுவையாக கிடைக்கும்.

Potato Samosa: சுட சுட டீக்கடை சமோசா! நீங்களும் செய்யலாம்! இதோ சிம்பிள் ரெசிபி!
Potato Samosa: சுட சுட டீக்கடை சமோசா! நீங்களும் செய்யலாம்! இதோ சிம்பிள் ரெசிபி!

தேவையான பொருட்கள்

அரை கப் கோதுமை மாவு

அரை கப் மைதா மாவு

3 உருளைக்கிழங்கு

அரை கப் பட்டாணி

2 பச்சை மிளகாய்

3 பல் பூண்டு 

சிறிதளவு இஞ்சி 

1 டீஸ்பூன் ஓமம் தூள்

1 டீஸ்பூன் சீரகம்

1  டீஸ்பூன் மல்லி தூள்

1 டீஸ்பூன் கரம் மசாலா

1  டீஸ்பூன் சீரக தூள்

1 டீஸ்பூன் மிளகு தூள்

1 டீஸ்பூன் ஆம்சூர் தூள்

தேவையான அளவு மிளகாய் தூள்

தேவையான அளவு எண்ணெய்

தேவையான அளவு உப்பு

சிறிதளவு கொத்தமல்லி

செய்முறை

முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா மாவு, ஓமம் தூள், சிறிதளவு உப்பு, மற்றும் சிறிதளவு எண்ணெய்யை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும். பின்னர் அதில் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். பிசைந்த மாவை மூடி வைக்க வேண்டும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும், சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் பட்டாணியை போட்டு வதக்கவும். பிறகு அதில் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு, மல்லி தூள், கரம் மசாலா, சீரக தூள், மிளகு தூள், ஆம்சூர் தூள், கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு,  மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும். பின் பிசைந்த மாவை எடுத்து சிறு துண்டுகளாக உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு சப்பாத்தி தேய்ப்பது போல தேய்த்து எடுத்துக் கொள்ளவும். 

பின்பு மாவை கூம்பு வடிவில் மடித்து அதனுள் உருளைக்கிழங்கு மசலாவை வைத்து ஓரங்களை சமமாக மடித்து வைத்துக் கொள்ளவும்.அதன் ஓரங்களை சிறிது தண்ணீர் வைத்து மூடவும் இவ்வாறு மீதமுள்ள மாவையும் தயார் செய்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும். எண்ணெய் சுட்ட பின் அதில் செய்து வைத்திருக்கும் சமோசாவை ஒவ்வொன்றாக கடாயின் அளவிற்கேற்ப போட்டு அதை நன்கு பொன்னிறம் ஆகும் வரை வேக விடவும். இரு பக்கங்களும் வெந்ததும் சுட சுட சமோசாவை பரிமாறவும். இப்பொழுது சூடான, மொறு மொறுப்பான உருளைக்கிழங்கு சமோசா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.