மயக்கும் மணத்தில் செய்யலாம் மசாலா நூடுல்ஸ்! குழந்தைகள் விரும்பும் சுவையில் இருக்கும்! இதோ எளிமையான ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மயக்கும் மணத்தில் செய்யலாம் மசாலா நூடுல்ஸ்! குழந்தைகள் விரும்பும் சுவையில் இருக்கும்! இதோ எளிமையான ரெசிபி!

மயக்கும் மணத்தில் செய்யலாம் மசாலா நூடுல்ஸ்! குழந்தைகள் விரும்பும் சுவையில் இருக்கும்! இதோ எளிமையான ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Published May 09, 2025 07:29 AM IST

குழந்தைகள் விரும்பும் உணவுகளில் ஒன்றாக நூடுல்ஸ் இருந்து வருகிறது. இதனை பல்வேறு விதமாக செய்து சாப்பிடுவார்கள். நீங்கள் வழக்கமாக செய்யும் முறையை விட்டு இன்று இங்கு கொடுக்கப்பட்டுள்ள மசாலா நூடுல்ஸ் செய்து பாருங்கள். சுவை குழந்தைகள் விரும்பும் வண்ணம் இருக்கும்.

மயக்கும் மணத்தில் செய்யலாம் மசாலா நூடுல்ஸ்! குழந்தைகள் விரும்பும் சுவையில் இருக்கும்! இதோ எளிமையான ரெசிபி!
மயக்கும் மணத்தில் செய்யலாம் மசாலா நூடுல்ஸ்! குழந்தைகள் விரும்பும் சுவையில் இருக்கும்! இதோ எளிமையான ரெசிபி!

தேவையான பொருட்கள்

4 பாக்கெட் ரமேன் நூடுல்ஸ்

2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

6 பல் பூண்டு

சிறிய அளவிலான இஞ்சி துண்டு

2 பெரிய வெங்காயம்

2 கேரட்

அரை முட்டைகோஸ்

1 சிவப்பு குடைமிளகாய்

1 பச்சை குடைமிளகாய்

தேவையான அளவு உப்பு

1 டீஸ்பூன் மிளகு தூள்

அரை டீஸ்பூன் சீரக தூள்

2 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்

2 டீஸ்பூன் சாட் மசாலா தூள்

1 டீஸ்பூன் சர்க்கரை

2 டீஸ்பூன் சோயா சாஸ்

வெங்காயத்தாள் வெங்காயம்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். பின்பு அதில் உப்பு சேர்த்து ரமேன் நூடுல்ஸ்சை சேர்த்து வேகவிடவும். இதில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து கலந்துவிடவும். நூடுல்ஸ் வெந்ததும் தண்ணீர் இன்றி வடிகட்டி தனியாக எடுத்து வைக்க வேண்டும். அடுத்து கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். பின்பு அதில் நறுக்கிய கேரட், முட்டைகோஸ் சேர்த்து கலந்துவிடவும்.

பிறகு நறுக்கிய சிவப்பு குடைமிளகாய், பச்சை குடைமிளகாய் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். பின்பு உப்பு, மிளகு தூள், சீரக தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சாட் மசாலா தூள், சர்க்கரை, சோயா சாஸ் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு இதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் வெங்காயம், வெங்காயத்தாள் சேர்த்து கலந்து வேகவைத்த நூடுல்ஸ்சை சேர்த்து கலந்து விட வேண்டும். கடைசியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து இறக்கி பரிமாறவும். சுவையான மசாலா நூடுல்ஸ் ரெடியாகி விட்டது. இதனை உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து மகிழ்ச்சி படுத்துங்கள்.