Jalebi Recipe: வீட்டிலேயே செய்யலாம் தித்திக்கும் ஜிலேபி! நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க! அசத்தலான ரெசிபி இதோ!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Jalebi Recipe: வீட்டிலேயே செய்யலாம் தித்திக்கும் ஜிலேபி! நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க! அசத்தலான ரெசிபி இதோ!

Jalebi Recipe: வீட்டிலேயே செய்யலாம் தித்திக்கும் ஜிலேபி! நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க! அசத்தலான ரெசிபி இதோ!

Suguna Devi P HT Tamil
Feb 05, 2025 03:39 PM IST

Jalebi Recipe: பேக்கரிகளுக்கு செல்லாமல் நாமே நம் வீட்டிலேயே செய்யக்கூடிய இனிப்பு பண்டங்களும் உள்ளன. ஜிலேபி என்றால் பலரது பேவரைட் இனிப்பு பந்தமாக இருக்கிறது. இந்த ஜிலேபியை எளிமையாக வீட்டிலேயே செய்யலாம். இந்த முறையை அறிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.

Jalebi Recipe: வீட்டிலேயே செய்யலாம் தித்திக்கும் ஜிலேபி! நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க! அசத்தலான ரெசிபி இதோ!
Jalebi Recipe: வீட்டிலேயே செய்யலாம் தித்திக்கும் ஜிலேபி! நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க! அசத்தலான ரெசிபி இதோ! (Pixabay)

தேவையான பொருட்கள்

ஒரு கப் உளுத்தம் பருப்பு

கால் கப் பச்சை அரிசி

2 கப் சர்க்கரை 

ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு பவுடர் 

ரோஸ் எஸன்ஸ் 

அரை லிட்டர் எண்ணெய்

ஒரு சதுர அடி கனமான துணி

செய்முறை

முதலில் ஜிலேபி செய்வதற்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் எடுத்து தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஜிலேபி பிழிவதற்கு தேவையான ஒரு துணியை எடுத்து அதனை நான்காக மடித்து நடுவில் சிறிய துளை போட்டுக் கொள்ள வேண்டும். இல்லையெனில் ஜிலேபி பிழியும் துணி கடைகளிலும் கிடைக்கும் அதனை வாங்கி பயன்படுத்தலாம். இப்பொழுது முதலில் உளுத்தம் பருப்பையும், பச்சை அரிசியையும் சேர்த்து பதினைந்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். ஊறிய பருப்பையும், அரிசியையும் ஒன்றாய் சேர்த்து கிரைண்டரில் போட்டு, தண்ணீர் அதிகம் விடாமல் சற்று கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த மாவில் கலர் பவுடரைச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரையை சேர்த்து தண்ணீர் ஊற்றி  இளம் கம்பி பதத்திற்கு பாகு காய்ச்ச வேண்டும். மேலும் அதனுடன் ரோஸ் எசன்ஸ் சேர்த்து கொள்ளவும். இப்பொழுது அரைத்த மாவினை ஜிலேபி பிழியும் துணியின் மையத்தில் வைத்து, அதை குவித்து பிடித்து, அழுத்தினால் ஓட்டையின் வழியாக மாவு வருமாறு செய்து கொள்ளவும். ஒரு பெரிய கடாயை அடுப்பில் வைத்து ஜிலேபி செய்யத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் துணியில் உள்ள மாவை ஜிலேபி வடிவம் போல பிழிந்து வேகவிடவும். சட்டியின் அகலத்தைப் பொறுத்து ஒரு முறைக்கு மூன்று நான்காகப் பிழிந்து விடலாம். இவை  ஒரு புறம் வெந்தவுடன் திருப்பிப் போட்டு மறுபுறத்தையும் வேக விடவும். அதிகம் வெந்தால் முறுகி விடும். பதமாக வேக வைக்கவேண்டும். இரண்டு புறமும் பதமாக வெந்தவுடன் ஒரு கரண்டியை வைத்து அதனை வெளியே எடுக்க வேண்டும். எண்ணெயை வடிய விட வேண்டும். எண்ணெய் வடிந்த பின்னர் அதனை எடுத்து நாம் காய்ச்சி வைத்துள்ள சர்க்கரை பாகில் போட வேண்டும்.  பாகில் நன்றாக ஊறியதும் எடுத்து தட்டில் அடுக்கவும். இப்போது சுவையான, சூடான தித்திக்கும் ஜிலேபி தயார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.