Dindigul Biryani: பிரியாணில பெஸ்ட்னா இது தான்! திண்டுக்கல் பிரியாணி ஸ்பெஷல்! கமகமக்கும் ரெசிபி!
Dindigul Biryani:தென் மாவட்டங்களில் செய்யப்படும் பிரியாணி செய்ய சீரக சம்பா அரிசியை பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாகவே பிரியாணிக்கு தனிச்சுவை உண்டாகிறது. திண்டுக்கல் பிரியாணி அதில் முக்கியமான இடத்தில் உள்ளது. இந்த திண்டுக்கல் பிரியாணி வீட்டிலேயே செய்யும் முறையை இங்கு காண்போம்.

இந்தியர்கள் அதிகம் விரும்பும் உணவாக பிரியாணி இருந்து வருகிறது. தமிழர்களே அதில் முதல் இடத்தில் இருக்கிறார்கள் எனக் கூறலாம். அந்த அளவிர்க்கு தமிழர்களுக்கு பிரியாணி மேல் பிரியம் உள்ளது. அதிலும் தென் மாவட்டங்களில் செய்யப்படும் பிரியாணி தான் சிறப்பான பிரியாணி எனக் கருதப்படுகிறது. இங்கு தான் பிரியாணி செய்ய சீரக சம்பா அரிசியை பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாகவே பிரியாணிக்கு தனிச்சுவை உண்டாகிறது. திண்டுக்கல் பிரியாணி அதில் முக்கியமான இடத்தில் உள்ளது. இந்த திண்டுக்கல் பிரியாணி வீட்டிலேயே செய்யும் முறையை இங்கு காண்போம்.
தேவையான பொருள்கள்
2 கப் சீரக சம்பா அரிசி
அரை கிலோ சிக்கன்
2 பெரிய வெங்காயம்
3 பச்சை மிளகாய்
3 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
2 டேபிள்ஸ்பூன் நெய்
3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
2 டீஸ்பூன் மிளகாய் தூள்
1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி தழை
ஒரு கைப்பிடி அளவு புதினா
1 கப் தேங்காய் பால்
2 கப் தண்ணீர்
தேவையான அளவு உப்பு
1 கப் கெட்டியான புளிக்காத தயிர்
பிரியாணி மசாலா
2 டேபிள்ஸ்பூன் சோம்பு
2 துண்டு பட்டை
4 ஏலக்காய்
1 அன்னாசிப்பூ
4 கிராம்பு
செய்முறை
முதலில் சிக்கனை நன்கு நீரில் கழுவி, பின் ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் ஊற வைப்பதற்கு தேவையான பொருட்களான தயிர், மிளகாய்த் தூள் மற்றும் உப்பு போன்ற பொருட்களை சேர்த்து பிரட்டி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பிரியாணி மசாலா நாமே தயாரிக்க வேண்டும். அதற்கு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றமால் சோம்பு, பட்டை, ஏலக்காய், அன்னாசிப்பூ மற்றும் கிராம்பு ஆகியவற்றை சேர்த்து வறுக்க வேண்டும். இவை அனைத்தும் ஆறியதும் ஒரு மிக்சி ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின்பு சீரகசம்பா அரிசியை கழுவி, நீரில் நன்கு ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடாக்க வேண்டும். இவை சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும். அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி விட வேண்டும்.
பின் நாம் ஊற வைத்துள்ள சிக்கனை அதில் போட்டு சில நிமிடங்கள் நன்கு கிளறி, சிக்கனில் மசாலா சேரும் வர பிரட்டி விட்டு ஒரு மூடி போட்டு மூடி வைத்து மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். பின்னர் குக்கரில் சிக்கனுடன் கூடிய மசாலாவை போட்டுக் கொள்ள வேண்டும். பின் அந்த வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி, ஊற வைத்துள்ள அரிசியை போட்டு கிளறி, அதையும் குக்கரில் போட்டுக் கொள்ள வேண்டும். அடுத்து அந்த குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கொத்தமல்லி, புதினா, தேங்காய் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், குக்கரை மூடி, தீயை அதிகரித்து 1 விசில் விட்டு, பின் தீயை குறைத்து அடுப்பை அணைக்க வேண்டும். அவ்வளவு தான் ருசியான திண்டுக்கல் பிரியாணி ரெடி.

டாபிக்ஸ்