Crab Curry: கமகமக்கும் நண்டு குழம்பு செய்யத்தெரியுமா? இதோ இந்த ரெசிபி இருக்கே! இப்பவே தெரிஞ்சுக்கோங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Crab Curry: கமகமக்கும் நண்டு குழம்பு செய்யத்தெரியுமா? இதோ இந்த ரெசிபி இருக்கே! இப்பவே தெரிஞ்சுக்கோங்க!

Crab Curry: கமகமக்கும் நண்டு குழம்பு செய்யத்தெரியுமா? இதோ இந்த ரெசிபி இருக்கே! இப்பவே தெரிஞ்சுக்கோங்க!

Suguna Devi P HT Tamil
Feb 05, 2025 11:27 AM IST

Crab Curry: கடல் நண்டு, ஆறு நண்டு, குளத்து நண்டு என நண்டில் பல வகைகள் உள்ளன. இந்த நண்டுகளை சமைப்பது சற்று சிக்கலான காரியம் தான். சுவையான மற்றும் காரசாரமான நண்டு குழம்பு செய்து சாப்பிட்டால் சளி குணமடையும் எனக் கூறப்படுகிறது. சுவையாக நண்டு குழம்பு செய்வது எப்படி என்பதை இங்கு தெரிந்துக் கொள்ளுங்கள்.

Crab Curry: கமகமக்கும் நண்டு குழம்பு செய்யத்தெரியுமா? இதோ இந்த ரெசிபி இருக்கே! இப்பவே தெரிஞ்சுக்கோங்க!
Crab Curry: கமகமக்கும் நண்டு குழம்பு செய்யத்தெரியுமா? இதோ இந்த ரெசிபி இருக்கே! இப்பவே தெரிஞ்சுக்கோங்க! (Cookpad)

தேவையான பொருட்கள்

ஒரு கிலோ நண்டு 

அரை கப் அளவு  முருங்கைக் கீரை

ஒரு கப் தேங்காய் பால் 

3 பெரிய வெங்காயம் 

4 தக்காளி 

3 பச்சை மிளகாய் 

ஒரு கொத்து கறிவேப்பிலை

3 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

1 டீஸ்பூன் மஞ்சள் தூள் 

1 டீஸ்பூன் மிளகாய் தூள் 

தேவையான அளவு உப்பு

1 டீஸ்பூன் சோம்பு 

ஒரு துண்டு பட்டை 

 4 ஏலக்காய் 

4 கிராம்பு 

ஒரு துண்டு சாதிக்காய்

அரை கப்  தேங்காய் துருவல்

அரை டீஸ்பூன் கடுகு

அரை டீஸ்பூன் வெந்தயம்

தேவையான அளவு எண்ணெய் 

செய்முறை

முதலில் நண்டை நன்றாக சுத்தம் செய்து கழுவி மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு கல் உப்பு சேர்த்து பிரட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் முருங்கைக் கீரையை கழுவி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில்  சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய் மற்றும்  சிறிதளவு கறிவேப்பிலை,துருவிய தேங்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் நன்கு வறுபட்ட பின்னர் ஆற வைத்து, ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு இதனை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம் பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். 

 இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெயை ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, வெந்தயம் ஆகியவற்றை போட்டு தாளிக்க வேண்டும். மேலும் அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். மேலும் இதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி விடவும். பின்னர் கழுவி வைத்திருந்த நண்டு, நறுக்கிய தக்காளி ,முருங்கைக்கீரை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும். பின்னர் இதனை சில நிமிடங்கள் மூடி போட்டு மூடி வைக்கவும். 10 நிமிடங்கள் கழித்து இதில் மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மீண்டும் வேக விட வேண்டும். இவை அனைத்தும் நன்கு வெந்த பின்னர் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலா பொருள் மற்றும் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விட்டு இறக்க வேண்டும். கமகமக்கும் நண்டு குழம்பு தயார் இதனை உங்களது வீடுகளில் செய்து பார்த்து சாப்பிட்டு மகிழுங்கள். 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.