தித்திக்கும் கேரட் லட்டு! குழந்தைகளுக்கு செஞ்சு கொடுத்து பாருங்க! சூப்பர் ரெசிபி இதோ!
குழந்தைகள் என்றாலே இனிப்பு உணவுகளை அதிகம் விரும்புவார்கள். இனிப்பை விரும்பாத குழந்தைகள் இல்லை. இனிப்பை விரும்பாவிட்டால் அது குழந்தையே இல்லை எனக் கூறலாம். அந்த அளவிற்கு இனிப்பு பண்டங்கள் குழந்தைகளின் மனதை ஆக்கிரமிப்பு செய்கின்றன.2
குழந்தைகள் என்றாலே இனிப்பு உணவுகளை அதிகம் விரும்புவார்கள். இனிப்பை விரும்பாத குழந்தைகள் இல்லை. இனிப்பை விரும்பாவிட்டால் அது குழந்தையே இல்லை எனக் கூறலாம். அந்த அளவிற்கு இனிப்பு பண்டங்கள் குழந்தைகளின் மனதை ஆக்கிரமிப்பு செய்கின்றன. ஆனால் குழந்தைகளுக்கு பிடித்த இந்த இனிப்பை மட்டும் கொடுத்து கொண்டிருந்தால் குழந்தைகளுக்கு உடல் நல பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே குழந்தைகள் சாப்பிடக்கூடிய சத்தான உணவுகளில் ஒன்றான காரட்டை வைத்து அவர்கள் விரும்பும் இனிப்பு பண்டத்தை செய்து கொடுக்கலாம். இந்த இனிப்பு பண்டங்கள் அவர்களுக்கு ஊட்டச்சத்தினையும் வழங்குகின்றன. அதில் ஒன்று தான் காரட் லட்டு. லட்டில் இந்த காய்கறியை கலந்து சாப்பிடுவது சிறந்த பலன்களை கொடுக்கும். வீட்டிலேயே காரட் லட்டு செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்,
தேவையான பொருட்கள்
அரை கிலோ கேரட்
100 கிராம் ரவை
20 முதல் 22 முந்திரி பருப்பு
சிறிதளவு உலர் திராட்சை
2 டேபிள்ஸ்பூன் நெய்
அரை கப் தேங்காய்
முக்கால் கப் சர்க்கரை
அரை டீஸ்பூன் ஏலக்காய் தூள்
செய்முறை
கேரட் லட்டு செய்வதற்கு முதலில் ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் அதில் நெய்யை ஊற்றுவோம். நெய் சூடாகியதும் அதில் முந்திரி மற்றும் உலர் திராட்சையை போட்டு பொன்னிறமாக வரும் வரை வறுக்க வேண்டும். பின்னர் பொன்னிறமானதும் அதனை எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே கடாயில் மேலும் சிறிதளவு நெய் ஊற்றி சூடு படுத்தவும். நெய் சூடானதும் அதில் ரவையை போட்டு வறுக்க வேண்டும். பின்னர் அந்த வாணலியில் கேரட்டை துருவி சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வதக்கி விட வேண்டும்.
சில நிமிடங்களுக்கு பிறகு வாணலியில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கலக்க வேண்டும் இது அனைத்தையும் சிறிது நேரம் வதக்கிய பின்னர் கடாயில் இது நெய் சேர்த்து அனைத்தையும் மீண்டும் கலக்கி கொள்ள வேண்டும். இதை கிளறிக் கொண்டே இருக்கும்போது நெயை சிறிது சிறிதாக சேர்க்க வேண்டும். பின்னர் இதனை ஒரு மூடி வைத்து மூடிய பின்னர் மிதமான தீயில் அப்படியே சில நிமிடங்கள் வேக விட வேண்டும். இதை நன்றாக வெந்த பின்பு அதில் சர்க்கரை சேர்த்து மீண்டும் மிதமான சூட்டில் சில நிமிடங்கள் வேக விட வேண்டும். பின்னர் ஏலக்காய் தூள், வறுத்த பருப்பு மற்றும் உலர் திராட்சை ஆகியவைகளை இவற்றில் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். அதில் உள்ள ஈரப்பதம் முழுவதும் வறண்டு போன பின்பு அடுப்பை அணைத்துவிட்டு இதனை ஆற வைக்கவும். ஒரு சில நிமிடங்களில் இந்த கலவை ஆறிய பின்னர் அதனை நீங்கள் விரும்பும் அளவிற்கு சிறு உருண்டைகளாகவோ அல்லது பெரிய உருண்டைகளாகவோ லட்டுகளாக பிடித்து வைத்துக் கொள்ளவும். இப்போது சுவையான கேரட் லட்டு தயார் நீங்களும் உங்களது வீடுகளில் செய்து பார்த்து மகிழ்ச்சியாக சாப்பிடுங்கள்.
டாபிக்ஸ்