காலை இட்லி சலித்து விட்டதா? இப்படி செஞ்சு பாருங்க! சுவையான லெமன் இட்லி! ஈசி ரெசிபி!
நமது வீடுகளில் தினம் தோறும் இட்லியிலேயே வித்தியாசத்தை ஏற்படுத்தினால் சுவையான காலை உணவு கிடைத்து விடும். அதில் ஒன்றுதான் லெமன் இட்லி. இது காலை உணவுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். எளிமையாக வீட்டிலேயே லெமன் இட்லி செய்வதை இங்கு தெரிந்துக் கொள்ளலாம்.
![காலை இட்லி சலித்து விட்டதா? இப்படி செஞ்சு பாருங்க! சுவையான லெமன் இட்லி! ஈசி ரெசிபி! காலை இட்லி சலித்து விட்டதா? இப்படி செஞ்சு பாருங்க! சுவையான லெமன் இட்லி! ஈசி ரெசிபி!](https://images.hindustantimes.com/tamil/img/2024/12/11/550x309/lemon_idly_1733891499247_1733891505818.png)
காலை எழுந்ததும் நாம் நாளை தொடங்குவது சிறப்பான காலை உணவு தான், இந்த காலை உணவு வழக்கமான ஒன்றாக இருக்கும் போது நம் வீட்டில் உள்ளவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தலாம். ஏனெனில் வித்தியாசமான உணவுகளை கொடுக்கும் போது அதில் சில சுவாரசியங்கள் இருக்கலாம். ஆனால் தினந்தோறும் வித்தியாசமாக யோசிப்பது இயலாத காரியம் தான். நமது வீடுகளில் தினம் தோறும் இட்லியிலேயே வித்தியாசத்தை ஏற்படுத்தினால் சுவையான காலை உணவு கிடைத்து விடும். அதில் ஒன்றுதான் லெமன் இட்லி. இது காலை உணவுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். எளிமையாக வீட்டிலேயே லெமன் இட்லி செய்வதை இங்கு தெரிந்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
20 இட்லி
2 டீஸ்பூன் எண்ணெய்
அரை டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
கால் டீஸ்பூன் கடுகு
கால் டீஸ்பூன் சீரகம்
2 வற மிளகாய்
அரை அங்குல துண்டு இஞ்சி
1 கொத்து கறிவேப்பிலை
2 பச்சை மிளகாய்
1 கப் வெங்காயம்
அரை டீஸ்பூன் உப்பு
அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
1 சிட்டிகை பெருங்காயத் தூள்
2 கொத்து கொத்தமல்லி இலைகள்
1 டீஸ்பூன் நெய்
1/2 எலுமிச்சை பழத்தின் சாறு
செய்முறைகள்
முதலில் வழக்கம் போல் இட்லி செய்வதற்கு இட்லி தட்டுகளில் சிறிதளவு எண்ணெய் தடவி, இட்லி மாவை அச்சுகளில் ஊற்ற வேண்டும். இட்லி நன்றாக வேகும் வரை 6 முதல் 7 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்க வேண்டும். வெப்பத்திலிருந்து தட்டுகளை அகற்றி, குளிர்விக்க அவற்றை ஒதுக்கி வைக்கவும். பின்னர் இப்போது சூடான இட்லியை ஒரு ஹாட் பேக்கில் வைத்து விட வேண்டும். பின்னர் நாம் எடுத்து வைத்த இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை ஆகியவைகளை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், வற சிவப்பு மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். கடுகு விதைகளை வெடிக்க ஆரம்பித்ததும், பின்னர் சில நொடிகள் வறுக்க வேண்டும்.
இறுதியாக நாம் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, அவை கண்ணாடி பதம் வரும் வரை சில நிமிடங்கள் வதக்க வேண்டும். பின்னர் இதில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்கயாத் தூளை சேர்க்க வேண்டும். இறுதியாக இட்லி மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து, மசாலாப் பொருட்களுடன் இட்லியை நன்கு கலக்குமாறு சில நொடிகள் வதக்கவும். இறுதியாக சிறிது நெய்யை ஊற்றி கலவையின் மீது எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து விட வேண்டும். அடுப்பைை அணைத்து விட்டு இதனை மொத்தமாக நன்றாக கலக்கி விடவும். எலுமிச்சை சாறு சேர்த்த பிறகு நீண்ட நேரம் சமைப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் அது கசப்பான சுவையை ஏற்படுத்தும். உங்கள் சுவையான எலுமிச்சை இட்லி ரெடி. நீங்களும் இதனை உங்கள் வீடுகளில் செய்து பார்த்து உண்டு மகிழுங்கள்!
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)
டாபிக்ஸ்