Bread Pakoda: உங்க வீட்ல பிரெட் இருக்கா? அப்போ சூப்பரா ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்யலாம்! பிரட் பக்கடோ ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Bread Pakoda: உங்க வீட்ல பிரெட் இருக்கா? அப்போ சூப்பரா ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்யலாம்! பிரட் பக்கடோ ரெசிபி!

Bread Pakoda: உங்க வீட்ல பிரெட் இருக்கா? அப்போ சூப்பரா ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்யலாம்! பிரட் பக்கடோ ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Jan 30, 2025 12:20 PM IST

Bread Pakoda: நாம் வீட்டிலேயே எளிமையான முறையில் ஒரு ஸ்நாக்ஸ் செய்ய முடியும். அதற்கு வீட்டில் உள்ள பிரட் போன்ற சில பொருட்களை பொதுவானதாகும் உங்கள் வீட்டில் பிரட் இருந்தால் இந்த சுவையான பிரட் பக்கோடாவை இன்றே செய்து பாருங்கள். அதை எப்படி செய்வது என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Bread Pakoda: உங்க வீட்ல பிரெட் இருக்கா? அப்போ சூப்பரா ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்யலாம்! பிரட் பக்கடோ ரெசிபி!
Bread Pakoda: உங்க வீட்ல பிரெட் இருக்கா? அப்போ சூப்பரா ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்யலாம்! பிரட் பக்கடோ ரெசிபி! (Dine Delicious)

தேவையான பொருட்கள்

10  முதல் 15 பிரட் துண்டுகள் 

400 மில்லி எண்ணெய்

4  உருளைக்கிழங்கு 

ஒரு பெரிய வெங்காயம் 

2 பச்சை மிளகாய் 

சிறிய அளவிலான இஞ்சி துண்டு 

அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் 

ஒரு டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்

ஒரு டீஸ்பூன் சீரக தூள் 

ஒரு டீஸ்பூன் மல்லித் தூள்

ஒரு டீஸ்பூன் கரம் மசாலா தூள் 

தேவையான அளவு உப்பு 

2 டீஸ்பூன் சாட் மசாலா தூள்

சிறிதளவு கொத்தமல்லி இலை 

பக்கடோ மாவிற்கு 

1 கப் கடலை மாவு 

அரை டீஸ்பூன் மிளகாய் தூள் 

அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் 

அரை டீஸ்பூன் உப்பு 

1 டீஸ்பூன் ஓமம்

தண்ணீர்

1 சிட்டிகை பேக்கிங் சோடா

செய்முறை

முதலில் ஒரு அகன்ற கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில்  நறுக்கிய வெங்காயம், 2 பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி விடவும். பின்னர் அதில் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சீரக தூள், மல்லித் தூள், கரம் மசாலா தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து கிளறி விடவும். பின்னர் வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்த்து மசிக்கவும்.

சாட் மசாலா தூள், கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும். உருளைக்கிழங்கு மசாலா தயார். இரண்டு பிரட் துண்டுகளை எடுத்து அதில் ஒரு துண்டின் மீது உருளைக்கிழங்கு மசாலாவை பரப்பி அதன் மேலே மற்றொரு பிரட் துண்டை வைத்து அழுத்தி வைக்கவும். இப்போது தயார் செய்த சான்விச்சை இரண்டாக வெட்டவும். பின்னர் ஒரு அகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, ஓமம் சேர்த்து கலந்து விட்டு பின்னர் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும். பேக்கிங் சோடா சேர்த்து கலந்து விடவும். வெட்டிவைத்த சான்விச்சை தயார் செய்த கடலை மாவு கலவையில் முக்கி எடுத்து சூடான எண்ணையில் சேர்த்து இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். இப்பொழுது சுவையான பிரட் பக்கோடா தயார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.