Banana Pachadi: வாய் ஊற வைக்கும் வாழைக்காய் பச்சடி! இன்னைக்கே செஞ்சு பாருங்க! சூப்பர் ரெசிபி இதோ!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Banana Pachadi: வாய் ஊற வைக்கும் வாழைக்காய் பச்சடி! இன்னைக்கே செஞ்சு பாருங்க! சூப்பர் ரெசிபி இதோ!

Banana Pachadi: வாய் ஊற வைக்கும் வாழைக்காய் பச்சடி! இன்னைக்கே செஞ்சு பாருங்க! சூப்பர் ரெசிபி இதோ!

Suguna Devi P HT Tamil
Jan 24, 2025 01:47 PM IST

Banana Pachadi: வாழைக்காயை சமையலுக்கு பல வகைகளில் பயன்படுத்தலாம். குழம்பு, கூட்டு, பொரியல் என செய்யலாம். இந்த வாழைக்காயை வைத்து சுவையான பச்சடி செய்யலாம். இந்த சுவையான பச்சடியை செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.

Banana Pachadi: வாய் ஊற வைக்கும் வாழைக்காய் பச்சடி! இன்னைக்கே செஞ்சு பாருங்க! சூப்பர் ரெசிபி இதோ!
Banana Pachadi: வாய் ஊற வைக்கும் வாழைக்காய் பச்சடி! இன்னைக்கே செஞ்சு பாருங்க! சூப்பர் ரெசிபி இதோ!

தேவையான பொருள்கள்

3 பெரிய வாழைக்காய்

கால் கப் துவரம் பருப்பு

 2 பெரிய வெங்காயம்

 4 பச்சை மிளகாய்

அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்

 அரை டீஸ்பூன் கடுகு

அரை டீஸ்பூன் உளுந்து

எலுமிச்சை அளவுள்ள புளி

 2 தக்காளி

 கறிவேப்பில்லை

ஒரு கைப்பிடி அளவுள்ள கொத்த மல்லி

தேவையான அளவு எண்ணெய்

 தேவையான அளவு தண்ணீர்

 தேவையான அளவு உப்பு

செய்முறை

முதலில் வாழைக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.  அத்துடன் வெங்காயம் , தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றையும் நன்றாக கழுவிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர கறிவேப்பில்லை, கொத்தமல்லி ஆகியவைகளை ஆய்ந்து நன்கு கழுவி வைத்துக்  கொள்ளவும். இவை அனைத்தையும் கழுவி முடித்ததும் தண்ணீரை ஓட்ட வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.  புளியை  தண்ணீரில் ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் வாழைக்காய், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் தூளை சேர்த்து துவரம் பருப்பு,  உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். இதில் பருப்பு குழையாமல் இருக்க வேண்டும். 

புளியைப் பச்சை வாசனை போகும் வரையில் நன்கு கொதிக்க விட வேண்டும். பிறகு மேற்கண்டவற்றுடன் சேர்க்கவும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக வேண்டும். எண்ணெய் சூடாநாட்டும் அதில்   கடுகு, உளுந்து, கறிவேப்பில்லை, கொத்துமல்லி ஆகிய  அனைத்தையும் போட்டு தாளித்து எடுக்க வேண்டும். இந்த தாளிப்பை  காய்கறி வேக வைத்த பதார்த்தத்தில் கொட்டவும். இதன் மேல் கொத்தமல்லி இழைக்களை நறுக்கி தூவி விட வேண்டும்.  இதோ இப்போது சுவையான வாழைக்காய் பச்சடி தயார். வாழைக்காயைச் சமைக்கும்போது மேல் தோலை மெல்லியதாகச் சீவியெடுத்தால் போதும். உள்தோலுடன் சமைப்பதே சிறந்தது. சிலர் இதுபோன்று சீவியெடுத்த தோலை நறுக்கி வதக்கி, புளி, மிளகாய் சேர்த்து துவையலாகச் செய்து உண்பார்கள். வாழைக்காய் அணைவருக்கும் சிறந்த உணவு அல்ல வாயு கோளாறு உள்ளவர்கள் மறுத்துவர்களிடம் ஆலோசித்து சாப்பிடுவது நல்லதாக்கும். நீங்களும் இந்த வாழைக்காய் பச்சடியை வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள். 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.