இது ஒண்ணு இருந்தா போதும்! சூடான சாதம் காலி தான்! அசத்தலான வத்தக்குழம்பு செய்வது எப்படி? ஈசியான ரெசிபி உள்ளே!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  இது ஒண்ணு இருந்தா போதும்! சூடான சாதம் காலி தான்! அசத்தலான வத்தக்குழம்பு செய்வது எப்படி? ஈசியான ரெசிபி உள்ளே!

இது ஒண்ணு இருந்தா போதும்! சூடான சாதம் காலி தான்! அசத்தலான வத்தக்குழம்பு செய்வது எப்படி? ஈசியான ரெசிபி உள்ளே!

Suguna Devi P HT Tamil
Published Apr 16, 2025 12:29 PM IST

தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான குழம்பு வகைகளில் ஒன்றாக வத்தக்குழம்பு இருந்து வருகிறது. இதனை சூடான சாதத்தோடு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இன்று நாம் வீட்டிலேயே வத்தக்குழம்பு செய்வது எப்படி எனத் தெரிந்துக் கொள்வோம்.

இது ஒண்ணு இருந்தா போதும்! சூடான சாதம் காலி தான்! அசத்தலான வத்தக்குழம்பு செய்வது எப்படி? ஈசியான ரெசிபி உள்ளே!
இது ஒண்ணு இருந்தா போதும்! சூடான சாதம் காலி தான்! அசத்தலான வத்தக்குழம்பு செய்வது எப்படி? ஈசியான ரெசிபி உள்ளே!

தேவையான பொருட்கள்

ஒரு நெல்லிக்காய் அளவுள்ள புளி

10 சின்ன வெங்காயம்

10 பல் பூண்டு

கால் கப் சுண்டைக்காய் வத்தல்

கால் கப் மணத்தக்காளி வத்தல்

தேவையான அளவு உப்பு

3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்

அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்

கால் டீஸ்பூன் கடுகு

கால் டீஸ்பூன் உளுத்தம் பருப்பு

வறுத்து அரைக்க:

5 அல்லது 6 வற மிளகாய்

2 டேபிள்ஸ்பூன் மல்லி விதை

1 டேபிள்ஸ்பூன் துவரம் பருப்பு

1 டேபிள்ஸ்பூன் மிளகு

1 டீஸ்பூன் சீரகம்

1 கொத்து கறிவேப்பிலை

சிறிதளவு வெந்தயம்

செய்முறை

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடந்தும் அதில் மல்லி விதை, துவரம் பருப்பு, மிளகு, கறிவேப்பிலை, வெந்தயம், சீரகம் , வற மிளகாய் இவை அனைத்தையும் போட்டு பொன்னிறமாக மாறும் வரை வறுக்க வேண்டும். இவ்வாறு வறுத்த பொருட்கள் ஆறிய பிறகு பொடியாக நறுக்கிய 3 அல்லது 4 சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு மைய (மசிய) அரைத்து கொள்ளவும். பின்னர் கடாயில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சுண்டக்காய் வத்தல்,மணத்தக்காளி வத்தல் இவற்றை தனித் தனியாக வறுத்து பின்பு வாணலியில் இருந்து எடுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

பின்னர் அதே எண்ணெய்யில் கடுகு, உளுந்து ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பின்னர் நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதனுடன் புளி, உப்பு சேர்த்து கரைத்து வடிகட்டி வதங்கிய பூண்டு,வெங்காயத்துடன் சேர்த்து விடவும். பின்னர் மஞ்சள் பொடி சேர்க்கவும். இதனுடன் அரைத்த விழுது சேர்க்கவும். கொதிக்கும் போது வறுத்து வைத்த வத்தல் வகைகளை சேர்க்கவும். கொதிக்கும் பொழுது 2 டேபிள் ஸ்பூன் நல்ல எண்ணெய் விடவும். நன்கு வற்றிய பிறகு இறக்கவும். அவ்வளவு தான் ருசியான வத்தக் குழம்பு தயார். சூடான சாதத்தில் வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

Suguna Devi P

TwittereMail
சுகுணா தேவி பி, 2019 ஆம் ஆண்டு முதல் ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் ஆங்கில இலக்கியத் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். 5 ஆண்டுகளுக்கும் மேல் அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் ஆகும். இவர் கடந்த 2024 செப்டம்பர் மாதம் முதல் தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் தேசம், லைப்ஸ்டைல், சினிமா மற்றும் உலகம் தொடர்பான செய்திகளில் தனது பங்களிப்பை அளித்து வருக்கிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.