தித்திக்கும் வாழைப்பழ பணியாரம்! பண்டிகை கொண்டாட்டத்திற்கு அசத்தல் ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தித்திக்கும் வாழைப்பழ பணியாரம்! பண்டிகை கொண்டாட்டத்திற்கு அசத்தல் ரெசிபி!

தித்திக்கும் வாழைப்பழ பணியாரம்! பண்டிகை கொண்டாட்டத்திற்கு அசத்தல் ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Published Oct 17, 2024 02:11 PM IST

பணியாரம் தமிழகத்தில் பரவலாக செய்யப்படும் ஒரு உணவு வகை ஆகும். இது இனிப்பு மற்றும் காரம் என இரு வேறு முறைகளில் செய்யப்படுகின்றன.

தித்திக்கும் வாழைப்பழ பணியாரம்! பண்டிகை கொண்டாட்டத்திற்கு அசத்தல் ரெசிபி!
தித்திக்கும் வாழைப்பழ பணியாரம்! பண்டிகை கொண்டாட்டத்திற்கு அசத்தல் ரெசிபி! (Awesome cuisine)

தேவையான பொருட்கள்

5 வாழைப்பழம்

150 கிராம் மைதா மாவு

150 கிராம் கோதுமை மாவு

150 கிராம் சர்க்கரை

1 பெரிய வெங்காயம்

1 சின்ன வெங்காயம்

3 தக்காளி

3 துண்டு தேங்காய்

1 பச்சை மிளகாய்

3 வற மிளகாய்

1 பல் பூண்டு

சிறிதளவு கடுகு

சிறிதளவு ஏலக்காய் தூள்

சிறிதளவு பேக்கிங் பவுடர்

சிறிதளவு கறிவேப்பிலை

தேவையான அளவு எண்ணெய்

தேவையான அளவு நெய்

தேவையான அளவு உப்பு

செய்முறை

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். சூடான பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும். பின்னர் அதில் நறுக்கிய தேங்காய், பச்சை மிளகாய், பூண்டு, கறிவேப்பிலையை போட்டு அதை வதக்கவும். பின் அதில்  நறுக்கிய தக்காளி, வற மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். நன்றாக வதங்கியவுடன் ஆற வைத்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் கடுகு, நறுக்கிய சின்ன வெங்காயம், வற மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலையை போட்டு கிளறி அதை எடுத்து அரைத்து வைத்திருக்கும் சட்னியில் சேர்த்து அதை நன்கு கலக்கவும்.பின்னர் சர்க்கரை மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். பின்பு அதில் வாழைப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக்கி அதில் போட்டு அதை நன்கு அரைத்து கொள்ளவும். மேலும் மைதா மாவு, கோதுமை மாவு, மற்றும் நெய்யை சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி அதை நன்கு அரைக்கவும். பேக்கிங் பவுடரை தண்ணீரில் கரைத்து இந்த கலவையில் ஊற்றவும். 

இந்த மாவு கலவையை 1 மணி நேரத்திற்கு அப்படியே ஊற விடவும்.இப்பொழுது பணியார சட்டியை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் இருக்கும் குழிகளில் எண்ணெய்யை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் ஊற வைத்திருக்கும் மாவை  எடுத்து அதை ஒவ்வொரு குழியிலும் பக்குவமாக ஊற்றி ஒரு மூடியைப் போட்டு மூடி பணியாரம் வெந்து மேலே வரும் வரை அதை வேக விடவும். பணியாரம் வெந்து மேலே வந்ததும் அதை திருப்பி போட்டு சிறிது நேரம் வேக விட்டு அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட  செய்து வைத்திருக்கும் கார சட்னியுடன் அதை பரிமாறவும். இதனை இனிப்பு சேர்க்காமல் செய்து சர்க்கரை நோயாளிகளுக்கும் கொடுக்கலாம்.