Chicken Pakoda: ரோட்டுக்கடை ஸ்டைலில் சிக்கன் பக்கோடா! பக்காவா செய்யலாம்! இதோ சூப்பர் ரெசிபி!
Chicken Pakoda: வீட்டிலேயே இந்த சிக்கன் பக்கோடாவை செய்து சாப்பிட்டால் சுத்தமான முறையில் ஒரு உணவு கிடைக்கும். வீட்டில் செய்யும் போதே அதே சுவை வராமல் போகலாம். இனி கவலை படத் தேவையில்லை. சுவையான சிக்கன் பக்கோடாவை வீட்டிலேயே எளிமையாக செய்வது எப்படி என்பதை இங்கு காணலாம்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புது விதமான உணவு வகைகள் சந்தைகளில் வந்துக் கொண்டிருக்கின்றன. அதில் சில மட்டுமே நமது உடலுக்கு நன்மை பயக்கின்றன. பலவற்றை சாப்பிடுவது தீங்கு விளைவிக்கலாம் என மருத்துவர்களும் கூறுகின்றனர். ஆனால் புரத சத்துக்கான எளிய மூலப்பொருள் என்றால் அது சிக்கன் தான். சிக்கன் உடலுக்கு சூடு என்ற வதந்தி இன்றும் பரவி வருகிறது. ஆனாலும் சிக்கனில் உள்ள நன்மைகளால் நாம் இது வரை பயன்படுத்தி வருகிறோம். நம்மில் சிலர் ரோட்டுக் கடைகளில் எண்ணெய்களில் பொரிக்கப்படும் சிக்கனை வாங்கி சாப்பிடுகின்றனர். அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த சிக்கன் அதிக எண்ணெய் இருக்கும் ஒரு உணவாகும். அதிலும் வெளியில் செய்யப்படும் சிக்கனில் ஒரே எண்ணெய் மீண்டும் மீண்டும் பயன்படுத்துகின்றனர். எனவவே வீட்டிலே நாமே இந்த சிக்கன் பக்கோடாவை செய்து சாப்பிட்டால் ஒரளவிற்கு அதன் தீமைகள் குறைக்கப்படும்.
வீட்டில் செய்யும் போதே அதே சுவை வராமல் போகலாம். இனி கவலை படத் தேவையில்லை. சுவையான சிக்கன் பக்கோடாவை வீட்டிலேயே எளிமையாக செய்வது எப்படி என்பதை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
கால் கிலோ எலும்பில்லாத சிக்கன்
ஒரு டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது
1 பச்சை மிளகாய்
1 பெரிய வெங்காயம்
அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
அரை டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய் தூள்
அரை டீஸ்பூன் சாட் மசாலா
அரை டீஸ்பூன் சீரக தூள்
அரை டீஸ்பூன் கரம் மசாலா தூள்
ஒரு கைபிடி அளவு கொத்தமல்லி
ஒரு கைபிடி அளவு கறிவேப்பிலை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்
3 டேபிள்ஸ்பூன் கடலை மாவு
3 டேபிள்ஸ்பூன் சோள மாவு
ஒரு டீஸ்பூன் ஓமம்
சிறிதளவு கேசரி பவுடர்
அரை டீஸ்பூன் சோடா உப்பு
தேவையான அளவு உப்பு
செய்முறை
முதலில் சிக்கனை நன்கு கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து கொள்ள வேண்டும். ஷாப்பர் இருந்தால் அதில் சிக்கனை போட்டு கொத்துகறி போல் அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். இல்லையெனில் ஒரு மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். சிக்கணை மிகவும் நைசாக அரைக்க கூடாது. பின்னர் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை அரைத்து கொள்ளவும். இப்பொழுது அரைத்த சிக்கனுடன் நறுக்கிய வெங்காயம், அரைத்த பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மசாலா பொடிகள் என அனைத்தையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும். பக்கோடா செய்வதற்கு முன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
பஜ்ஜி மாவு செய்வதற்கு கடலை மாவு, சோள மாவு என இரண்டையும் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ள வேண்டும். பின்னர் சிக்கனை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வைத்துக் கொள்ளவும் கரைத்து வைத்துள்ள மாவில் கையை நனைத்து கொள்ளவும். பிறகு சிக்கன் உருண்டை மேல் கையில் உள்ள மாவை தடவ வேண்டும். சிக்கனை மாவிற்குள் போட்டு முக்கி எடுக்க வேண்டாம். அப்படி செய்தால் சிக்கனை விட மாவு நிறைய இருப்பது போல் இருக்கும். இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி இந்த சிக்கனை போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான மற்றும் மொறு மொறுப்பான சிக்கன் பக்கோடா தயார்.

டாபிக்ஸ்