ரோட்டுக்கடை ஸ்டைலில் முட்டை கலக்கி செய்யத் தெரியுமா! அருமையான ரெசிபி உள்ளே!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ரோட்டுக்கடை ஸ்டைலில் முட்டை கலக்கி செய்யத் தெரியுமா! அருமையான ரெசிபி உள்ளே!

ரோட்டுக்கடை ஸ்டைலில் முட்டை கலக்கி செய்யத் தெரியுமா! அருமையான ரெசிபி உள்ளே!

Suguna Devi P HT Tamil
Dec 19, 2024 03:43 PM IST

தமிழ்நாட்டின் பல ஹோட்டல்களில் சாப்பிட்டதற்கு பின் ஆர்டர் செய்யப்படும் கலக்கி ஒரு சுவையான உணவாகும். குறிப்பாக தென் மாவட்டங்களில் இந்த கலக்கி மிகவும் பிரபலமான உணவாகும்.

ரோட்டுக்கடை ஸ்டைலில் முட்டை கலக்கி செய்யத் தெரியுமா! அருமையான ரெசிபி உள்ளே!
ரோட்டுக்கடை ஸ்டைலில் முட்டை கலக்கி செய்யத் தெரியுமா! அருமையான ரெசிபி உள்ளே! (Chennai Samayal)

தேவையான பொருட்கள்

கறி முட்டை கலக்கி செய்ய

2 முட்டை 

2 டீஸ்பூன் மிளகாய் தூள் 

அரை டீஸ்பூன் உப்பு

2 டீஸ்பூன் மிளகு

கால் கப் சிக்கன் குழம்பு

2 டீஸ்பூன் எண்ணெய் 

முட்டை கலக்கி செய்ய

2 முட்டை

2 டீஸ்பூன் மிளகாய் தூள்

அரை டீஸ்பூன் உப்பு

2 டீஸ்பூன் மிளகு

2 டீஸ்பூன் எண்ணெய்

செய்முறை

முதலில் ஒரு அகன்ற கிண்ணத்தில் இரண்டு முட்டைகளையும் உடைத்து ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் தேவையான அளவு உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். மேலும் கால் கப் சிக்கன் குழம்பு சேர்த்து ஒரு கரண்டி அல்லது முட்டையை கலக்கும் கம்பியை வைத்து நன்றாக கலக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை எந்த அளவிற்கு வேகமாக கலக்குகிறோமோ அது அந்த அளவிற்கு சிறப்பாக வரும். பின்னர் ஒரு தவாவை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் நாம் அடித்து வைத்திருந்த முட்டை கலவையை சேர்க்க வேண்டும். பின்னர் கரண்டியால் முட்டையின் ஓரத்தை உள்புறமாக மூட வேண்டும்.முட்டை கலவை நன்கு திறந்து வரும் வேளையில்  இதனை அப்படியே தவாவிலிருந்து உடனடியாக தட்டிற்கு மாற்ற வேண்டும். இப்பொழுது சுவையான கறி முட்டை கலக்கி தயார்.

முட்டை கலக்கி செய்ய

 முட்டை கலக்கி செய்யவும் இதே முறையை பின்பற்ற வேண்டும். இதில் நாம் சிக்கன் குழம்பை சேர்க்கத் தேவையில்லை. ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் தவாவில் எண்ணெய் ஊற்றி, அடித்த முட்டை கலவையை ஊற்றவும். ஊற்றியவுடன் கரண்டியால் முட்டையின் ஓரத்தை உள்புறமாக மூடவும். முட்டை கலவை திரண்டவுடன் அதை தவாவிலிருந்து உடனடியாக தட்டிற்கு மாற்றவும். சூடான முட்டை கலக்கி தயார்.பெரும்பாலான கடைகளில் கறி முட்டை கலக்கி அதிகமாக விற்பனையாகிறது. இந்த கலக்கி மிகவும் சுவையானதாகவும் இருக்கிறது. நீங்களும் இதனை வீட்டிலேயே ட்ரை செய்து பார்த்து சாப்பிட்டு மகிழுங்கள். 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.