Sprouts Salad: பலம் தரும் முளைகட்டிய பயறு சாலட் செய்வது எப்படி? ஈஸியான ரெஸிபிக்கு இத படிங்க!
Sprouts Salad: பச்சை காய்கறிகளை சாலட் செய்து சாப்பிடும் போது அதன் சத்துக்கள் நமது உடலுக்கு நேரடியாக கிடைக்கின்றன. இது போலவே பயறு வகைகளை முளைகட்டிய நிலையில் சாப்பிடும் போது மிகுந்த ஊட்டச்சத்துகளை தருகிறது.
முளை கட்டிய பயறு வகைகளை சாப்பிடும் போது வயிறும் நிறைந்து விடும். இது சிறந்த காலை உணவாகவும் பயன்படுகின்றன. மேலும் இதனால் உடலின் பல நோய்கள் குணம் அடைவதுடன், சிறந்த ஊட்டச்சத்தையும் வழங்குகின்றன. பச்சை காய்கறிகளை சாலட் செய்து சாப்பிடும் போது அதன் சத்துக்கள் நமது உடலுக்கு நேரடியாக கிடைக்கின்றன. இது போலவே பயறு வகைகளை முளைகட்டிய நிலையில் சாப்பிடும் போது மிகுந்த ஊட்டச்சத்துகளை தருகிறது.
இத்தகைய முளை கட்டிய பயறுகளை வைத்து சாலட் செய்து சாப்பிடும் போது அது கூடுதல் நன்மைகளை வழனக்கும். இத்தகைய முளை கட்டிய பயறுகளை வைத்து எளிமையாக சாலட் செய்வது என்பதை தெரிந்த கொள்ள இதனை முழுமையயாக படியுங்கள்.
தேவையான பொருட்கள்
100 கிராம் பாசிப்பயறு
50 கிராம் கருப்பு சுண்டல்
50 கிராம் சோயா பயறு
50 கிராம் நிலக்கடலை
50 கிராம் தட்டாம் பயறு
ஒரு மக்காச் சோளம்
ஒரு கேரட்
ஒரு வெள்ளரிக்காய்
ஒரு சிறிய எலும்பிச்சை பழம்
தேவையாயன அளவு உப்பு
தேவையான அளவு மிளகுத்தூள்
ஒரு டம்ளர் தயிர்
செய்முறை
பாசிப்பயறு, சுண்டல், தட்டாம் பயறு, சோயா பயறு, நிலக்கடலை ஆகியவற்றை முந்தைய நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து முளை கட்டிய நிலையில் எடுத்து வைத்து கொள்ள வேண்டும். மேலும் காரட், மற்றும் மக்காச் சோளத்தை ஒரு தண்ணீரில் 2 முதல் 3 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது வெள்ளரிக்காய், காரட் ஆகியவற்றை பொடியாக நறுக்கி, மக்காச் சோளத்தை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் முளை கட்டிய பயறுகளை போட்டு கலக்க வேண்டும். மேலும் நறுக்கி வைத்திருந்த மக்காச்சோளம், காரட், வெள்ளரிக்காயை சேர்க்கவும். பின்னர் அதில் ஒரு எழும்பிச்சை பிழிந்து விட வேண்டும். தயிரை ஊற்றி நன்கு கிளறவும். இறுதியாக தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கிளறி விட வேண்டும். இதனை தினமும் காலை உணவாகவோ, மாலை நேர உணவாகவோ எடுத்துக் கொள்ளலாம்.
முளை கட்டிய பயறுகளின் பயன்கள்
முளை கட்டிய பாசிப் பயிற்றை சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் தினமும் உணவில் எடுத்துக் கொள்ளலாம். இதில் புரதம், பொட்டாசியம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட் ஆகியவை அதிகளவில் இருக்கின்றன. முளைகட்டிய தட்டை பயிற்றில் வைட்டமின் ஏ, பொட்டாசியம், மக்னீசியம், ஆன்ட்டி-ஆக்சிடென்ட்டுகள் அதிகம் உள்ளது.
குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு முளைகட்டிய சோயா பயறு உதவுகிறது. இதில் துத்தநாகம், மெக்னீசியம், தாமிரம், புரதம், இரும்பு, ஃபோலிக் ஆசிட், கால்சியம், பாஸ்பரஸ், ஒமேகா 3 வகை கொழுப்பு, மாவுச்சத்து, பீட்டாகரோட்டின், தயாமின், ரிபோஃபோமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. மேலும் இந்த பயறு வகைகள் அனைத்தும் வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைச் சரிசெய்யும். மேலும் இது உடல் சூட்டைக் குறைக்கும். சத்துக் குறைபாடு உள்ளவர்கள் தினமும் கம்புப்பயறு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதியாகும்.
டாபிக்ஸ்