காரசாரமா காலிபிளவர் பக்கோடா செய்வது எப்படி? பக்காவான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெசிபி ரெடி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  காரசாரமா காலிபிளவர் பக்கோடா செய்வது எப்படி? பக்காவான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெசிபி ரெடி!

காரசாரமா காலிபிளவர் பக்கோடா செய்வது எப்படி? பக்காவான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெசிபி ரெடி!

Suguna Devi P HT Tamil
Oct 24, 2024 02:07 PM IST

நமது வீட்டில் மாலை நேரம் வந்தாலே சூடான டீயுடன், மொறு மொறுப்பான ஸ்நாக்ஸ் சாப்பிடுவது வழக்கமான ஒன்றாகும். அதிலும் பக்கடோ போன்ற உணவுகளின் க்ரிஸ்பி தன்மையே அந்த மாலையை சுவவையானதாக மாற்றும்.

காரசாரமா காலிபிளவர் பக்கோடா செய்வது எப்படி? பக்காவான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெசிபி ரெடி!
காரசாரமா காலிபிளவர் பக்கோடா செய்வது எப்படி? பக்காவான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெசிபி ரெடி!

தேவையான பொருட்கள்

அரை கப் கடலை மாவு

அரை கப் அரிசி மாவு

அரை  கப் சோள மாவு

1 காலிஃப்ளவர் பூ

1 பெரிய வெங்காயம்

1 பச்சை மிளகாய்

3 பல் பூண்டு

1 துண்டு இஞ்சி

1 சிட்டிகை கேசரி பவுடர்

தேவையான அளவு மிளகாய் தூள்

தேவையான அளவு உப்பு

தேவையான அளவு எண்ணெய்

சிறிதளவு கறிவேப்பிலை

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் காலிஃப்ளவரை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை சுட வைக்கவும். தண்ணீர் சுட்ட பின் அதில் சிறிதளவு உப்பு மற்றும் நாம் நறுக்கிய காலிபிளவரை போட்டு ஒரு மூடி போட்டு அதை வேக விடவும். சிறிது நேரத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு காலிஃப்ளவரில் இருக்கும் தண்ணீரை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி காலிஃப்ளவரை எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். பின்பு ஒரு அகன்ற பாத்திரத்தை எடுத்து அதில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, ஒரு சிட்டிகை கேசரி பவுடர், தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை போட்டு அதை நன்கு கலந்து விடவும். பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அதை நன்கு பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். மாவு பஜ்ஜி மாவு பதத்திற்கு வந்ததும் அதில் நறுக்கிய  காலிஃப்ளவரை போட்டு அதை நன்கு கலந்து விடவும். அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் காலிஃப்ளவரை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சூடாக்கவும். எண்ணெய் சுட்ட பின் கடாயின் அளவிற்கேற்ப அதில் ஒவ்வொன்றாக காலிஃப்ளவரை எடுத்து பக்குவமாக எண்ணெய்யில் போட்டு அது பொன்னிறமாகும் வரை அதை பொரிக்கவும். காலிஃப்ளவர் பக்கோடா நன்கு பொன்னிறமானதும் ஒரு ஜல்லி கரண்டியின் மூலம் அதை எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து பின்பு ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். பின்னர் அடுப்பை அணைத்து விட்டு எண்ணெய் சூடாக இருக்கும்போதே அதில் ஒரு கையளவு கறிவேப்பிலையை அதில் போட்டு அதை பொரித்து எடுத்து காலிஃப்ளவர் பக்கோடாவுடன் சேர்த்து நன்கு கிளறி விட்டு அதை சுட சுட பரிமாறவும். இப்பொழுது சூடான மற்றும் மிகவும் சுவையான காலிஃப்ளவர் பக்கோடா தயார். இதை உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.