Special Curd Rice: ஸ்பெஷல் தயிர் சாதம்!இனி இப்படி செஞ்சு பாருங்க! அசத்தலான ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Special Curd Rice: ஸ்பெஷல் தயிர் சாதம்!இனி இப்படி செஞ்சு பாருங்க! அசத்தலான ரெசிபி!

Special Curd Rice: ஸ்பெஷல் தயிர் சாதம்!இனி இப்படி செஞ்சு பாருங்க! அசத்தலான ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Published Oct 04, 2024 02:01 PM IST

Special Curd Rice: நமது வீடுகளில் காய்கறிகள் இல்லாத சமயத்திலும், உடனடியாக சமையல் செய்ய வேண்டும் என்ற சமயங்களிலும் உதவக்கூடிய ஒரு உணவு தான் தயிர் சாதம்.

Special Curd Rice: ஸ்பெஷல் தயிர் சாதம்!இனி இப்படி செஞ்சு பாருங்க! அசத்தலான ரெசிபி!
Special Curd Rice: ஸ்பெஷல் தயிர் சாதம்!இனி இப்படி செஞ்சு பாருங்க! அசத்தலான ரெசிபி!

தேவையான பொருட்கள்

ஒரு கப் சாதம்

அரை கப் தயிர் 

அரை கப் பால்

கேரட்

மாதுளம் பழம்

2 பச்சை மிளகாய்

2 வற மிளகாய்

சிறிதளவு இஞ்சி

சிறிதளவு கடுகு

சிறிதளவுஉளுத்தம் பருப்பு

சிறிதளவு கடலை பருப்பு

சிறிதளவு பெருங்காய தூள்

தேவையான அளவு எண்ணெய்

தேவையான அளவு உப்பு

சிறிதளவு கறிவேப்பிலை

சிறிதளவு கொத்தமல்லி

செய்முறை

முதலில் அரிசியை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை ஊற வைக்கவும்.  அதனை நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். சாதம் ஆறிய பின்னர் அதனை மசித்து வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்றி அதை நன்கு கொதிக்க விடவும். பால் நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதை அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து சிறிது நேரம் ஆற விடவும். 

பின்னர் ஒரு அகன்ற பாத்திரத்தில் மசித்த சாதத்தை போடவும். அதில் தயிர் மற்றும்  காய்ச்சி ஆற வைத்திருக்கும் பாலை ஊற்றி அதை நன்கு கலந்து விடவும். பிறகு அதில் துருவிய கேரட், கொத்தமல்லி, பச்சை மிளகாய், மாதுளம் பழம், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை பக்குவமாக நன்கு கலந்து கொள்ளவும். மாதுளம் பழத்தை தயிர் சாதத்தை சாப்பிடுவதற்கு முன் சாதத்தில் போட்டு கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்க வேண்டும். 

எண்ணெய் சுட்ட பின் அதில் கடுகை போட்டு கடுகு வெடித்தவுடன் அதில் உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பை போட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வறுக்கவேண்டும். ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, காய்ந்த மிளகாய், ஒரு சிட்டிகை அளவு பெருங்காய தூள், மற்றும் கருவேப்பிலையை போட்டு அதை நன்கு கலந்து விட வேண்டும். இதனை சுமார் ஒரு நிமிடம் வரை வறுக்கவும். ஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு  தாளித்த கலவையை கலந்து வைத்திருக்கும் தயிர் சாதத்தில் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு பின்பு சிறிது நேரம் ஆற விட்டு பின் அதை பரிமாறவும். இப்பொழுது உங்கள் அட்டகாசமான மற்றும் மிகவும் அருமையாக இருக்கும் தயிர் சாதம் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள். இந்த முறையில் தயிர் சாதத்தை செய்து கொடுத்தால் மிகவும் சுவையாக வரும்.