பொங்கலோ பொங்கல்! சர்க்கரைப் பொங்கல்! குக்கரிலேயே தித்திக்கும் பொங்கல் வைப்பது எப்படி? இதோ இப்பவே தெரிஞ்சுக்கோங்க!
புத்தாண்டு பிறந்தாலே அதனைத் தொடர்ந்து பண்டிகைகளே வருகிறது. தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கலும் இந்த ஜனவரி மாதத்தில் வருகிறது. விவசாயத்திற்கு உதவிய சூரியன் மற்றும் மாடுக்கு நன்றி சொல்லும் விதத்தில் விவசாயிகள் பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனர்.
புத்தாண்டு பிறந்தாலே அதனைத் தொடர்ந்து பண்டிகைகளே வருகிறது. தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கலும் இந்த ஜனவரி மாதத்தில் வருகிறது. விவசாயத்திற்கு உதவிய சூரியன் மற்றும் மாடுக்கு நன்றி சொல்லும் விதத்தில் விவசாயிகள் பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனர். அதிலும் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் ஜல்லிக்கட்டு, விளையாட்டு போட்டிகள் என விழாக்கோலம் பூண்டு இருக்கின்றன. பொங்கல் விழா என்றால் சர்க்கரைப் பொங்கல் இல்லாமல் அது முழுமையடையாது. ஆனால் நகரங்களில் இருக்கும் மக்கள் பானைகளில் பொங்கல் வைப்பதற்கு வசதி ஏதுவாக இருப்பதில்லை. அதனால் குக்கரில் தான் பொங்கல் வைக்க முடியும். சிலருக்கு குக்கரில் பொங்கல் வைப்பது சரியான பதத்தில் வைக்க முடியாது. எனவே அடி பிடிக்காமல் சுவையான சர்க்கரைப் பொங்கலை குக்கரில் வைப்பது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
ஒரு கப் பச்சரிசி
அரை கப் பாசிப்பருப்பு
2 கப் வெல்லம்
அரை மூடி தேங்காய்
ஒரு கப் நெய்
கால் கப் முந்திரி
கால் கப் உலர் திராட்சை
செய்முறை
சர்க்கரை பொங்கல் செய்வதற்கு முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் அரிசி மற்றும் பாசிப்பருப்பை போட்டு சற்று பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வருத்த இந்த அரிசி மற்றும் பாசிப்பருப்பு கலவையை தண்ணீர் ஊற்றி குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் வரை ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி சர்க்கரை பொங்கலுக்கு தேவையான வெல்லத்தை போட வேண்டும். அந்த வெல்லம் நன்கு கரையும் வரை கரைக்க வேண்டும். வெல்லப் பாகு கரைசலாக மாற்றி அதையும் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இப்பொழுது 20 நிமிடங்கள் ஊற வைத்து எடுத்த அரிசி மற்றும் பருப்பை ஒரு குக்கரில் போட்டு இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். இதனை இரண்டு விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த வேக வைத்த அரிசி மற்றும் பருப்பை எடுத்து ஒரு கரண்டியால் நன்கு மசித்து வைத்துக் கொள்ள வேண்டும். நாம் முன்னதாக செய்து வைத்திருந்த வெல்லப்பாகு கரைசலை இதில் சிறிது சிறிதாக ஊற்ற வேண்டும். பின்னர் அரை கப் நெய்யையும் இதில் ஊற்றி நன்றாக கிளற வேண்டும். இறுதியாக நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சையை போட்டு நன்றாக கிண்டி விட வேண்டும். மேலும் இதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். இறுதியாக மிகவும் கட்டியாக இருந்தால் தண்ணீர் ஊற்றி மீண்டும் கிளறி விட வேண்டும். இறுதியாக சுவையான மற்றும் சரியான பதத்தில் சர்க்கரைப் பொங்கல் தயாராகி விட்டது. இதனை உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிடலாம். பொங்கலுக்கு முன்னதாகவே ஒரு முறை செய்து பார்த்து விட்டால், பொங்கல் அன்று செய்வதற்கு எளிமையாக இருக்கும். இதனை செய்து உங்கள் பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.
டாபிக்ஸ்