முப்பது நிமிசம் போதும்! முட்டை பிரியாணி செய்ய! ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் செஞ்சு அசத்துங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  முப்பது நிமிசம் போதும்! முட்டை பிரியாணி செய்ய! ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் செஞ்சு அசத்துங்கள்!

முப்பது நிமிசம் போதும்! முட்டை பிரியாணி செய்ய! ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் செஞ்சு அசத்துங்கள்!

Suguna Devi P HT Tamil
Jan 04, 2025 09:56 AM IST

பிரியாணி என்று சொன்னாலே போதும் பலருக்கும் நா ஊற ஆரம்பித்து விடும். அந்த அளவிற்கு பிரியாணி மீது அலாதியான பிரியம் இருந்து வருகிறது.

முப்பது நிமிசம் போதும்! முட்டை பிரியாணி செய்ய! ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் செஞ்சு அசத்துங்கள்!
முப்பது நிமிசம் போதும்! முட்டை பிரியாணி செய்ய! ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் செஞ்சு அசத்துங்கள்! (Pexel )

மேலும் ஸ்விகிசொமேட்டோ போன்ற ஃபுட் டெலிவரி ஆப்களில் கூட பிரியாணியே அதிகம் ஆர்டர் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிரியாணியில் பல வகைகள் உள்ளன. அசைவ பிரியாணி, சைவ பிரியாணி உள்ளன. அந்த வகையில் எளிமையாக வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு பிரியாணி தான் முட்டை பிரியாணி, முட்டையை வைத்து பிரியாணி செய்வதால் அசைவ உணவின் சுவையையும் அது கொடுக்கும். அதே நேரத்தில் புரதச்சத்தும் முட்டையிலிருந்து நமக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த முட்டை பிரியாணி செய்வதற்கு அதிக நேரங்கள் கூட செலவாக செலவாகாது. வெறும் 30 நிமிடத்தில் முட்டை பிரியாணி நீங்களே அசத்தலான செய்முறையில் செய்துவிடலாம். ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் முட்டை பிரியாணி செய்யும் எளிய முறையை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள். 

தேவையான பொருட்கள் 

2 கப் பாசுமதி அரிசி / சீரக சம்பா அரிசி 

5 முட்டை 

2 தக்காளி 

4 பெரிய வெங்காயம் 

2 பச்சை மிளகாய்

சிறிதளவு இஞ்சி 

5 பல் பூண்டு 

ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி தழை 

1 டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள் 

1 டீஸ்பூன் மஞ்சள் தூள் 

2 பட்டைத் துண்டு 

ஒரு நட்சத்திரப் பூ 

ஒரு பிரியாணி இலை 

5 கிராம்பு 

4 ஏலக்காய் 

சிறிதளவு கடல் பாசி 

சிறிதளவு ஜாதி பத்திரி 

அரை டீஸ்பூன் மிளகு 

அரை டீஸ்பூன் சீரகம் 

அரை டீஸ்பூன் சோம்பு 

அரை டீஸ்பூன் மல்லி 

செய்முறை 

முதலில் பிரியாணி செய்வதற்கு பிரியாணி மசாலா அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஒரு கடாயில் பட்டை, நட்சத்திர பூ,  பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், கடல் பாசி  ஜாதி பத்திரி, மிளகு, சீரகம்,  சோம்பு மற்றும் மல்லி ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.  இதனை நன்கு ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் இதில் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி தழை போட்டு அரைக்க வேண்டும்.  பின்னர் நான்கு முட்டைகளையும் வேக வைத்து அதனை வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி மிளகாய் பொடி மற்றும் மஞ்சள் பொடி, சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதில்  முட்டைகளை போட்டு நன்கு மசாலா கலக்குமாறு கிளறி விட வேண்டும். இதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

 பின்னர் பாசுமதி அரிசியை கழுவி சுத்தம் செய்து ஒரு அரை மணி நேரம் ஊற வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில்  நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சுட்டதும் நாம் அரைத்து வைத்திருந்த பிரியாணி மசாலாவை போட்டு நன்கு பச்சை வாசனை வரும் வரை வதக்க வேண்டும். அவை அனைத்தும் நன்கு வதங்கிய பின்னர் அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்க வேண்டும் பின்னர் நறுக்கிய தக்காளியையும் போட்டு வதக்க வேண்டும். பின்னர்  மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். இந்த நிலையில் அரிசியை தண்ணீர் வடித்து இதில் சேர்க்க வேண்டும். மேலும் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மசாலாவில் பிரட்டி வைத்திருந்த முட்டையை எடுத்து அதன் மேல் வைக்க வேண்டும். மேலும் புதினா மற்றும் கொத்தமல்லி தலையை இதன் மேல் தூவி விட்டு குக்கர் மூடி போட்டு மூட வேண்டும். இதனை மிதமான சூட்டில் இரண்டு விசில் வரை வரும் வரை வைத்து எடுத்தால் சுவையான பிரியாணி ரெடி. 

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.