உதிராமல் ரவா லட்டு செய்ய முடியவில்லையா? இப்படி ட்ரை பண்ணி பாருங்க! சூப்பரா இருக்கும்!
வீட்டில் குழந்தைகளுக்கு உடனடியாக செய்து கொடுக்க கூடிய ஒரு எளிமையான இனிப்பு என்னவென்றால் ரவா லட்டு தான். ரவையை வைத்து மிகவும் குறைவான நேரத்தில் ஈஸியாக செய்து விடலாம். ஆனால் சிலருக்கு லட்டு பிடிக்கும் போதும், பிடித்த பின்பும் ரவை உதிரும்.
வீட்டில் குழந்தைகளுக்கு உடனடியாக செய்து கொடுக்க கூடிய ஒரு எளிமையான இனிப்பு என்னவென்றால் ரவா லட்டு தான். ரவையை வைத்து மிகவும் குறைவான நேரத்தில் ஈஸியாக செய்து விடலாம். ஆனால் சிலருக்கு லட்டு பிடிக்கும் போதும், பிடித்த பின்பும் ரவை உதிரும். இதற்கு காரணம் சரியான அளவில் பொருட்களை சேர்க்காமல் இருப்பதால் இருக்கும். உதிராமல் ரவா லட்டு செய்வடு எப்படி என்பதை இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்
அரை கப் ரவை
அரை கப் சர்க்கரை
அரை லிட்டர் பால்
அரை கப் துருவிய தேங்காய்
கால் கப் உலர் திராட்சை
1 டேபிள்ஸ்பூன் ஏலக்காய் தூள்
கால் கப் முந்திரி
சிறிதளவு பாதாம்
200 கிராம் நெய்
செய்முறை
முதலில் ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு நெய்யை ஊற்றி சூடாக்கவும். நெய் சூடானதும் அதில் நறுக்கிய முந்திரியை போட்டு நிறம் மாறும் வரை வறுத்து எடுத்து தனியாக வைத்து கொள்ளவும். பின்பு அதே கடாயில் உலர் திராட்சையை போட்டு வறுத்து அதையும் எடுத்து தனியாக வைத்து கொள்ளவும். இப்பொழுது வேறு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடாக்கவும்.நெய் சுட்ட பின் அதில் ரவை மற்றும் நாம் துருவி வைத்திருக்கும் தேங்காயை போட்டு ரவை சிறிது நிறம் மாறும் வரை வறுத்து எடுத்து ஒரு தட்டில் வைத்து அதை ஆற விடவும். ரவையை நன்கு வறுக்கும் போது தான் லட்டு சுவையாக இருக்கும்.
இப்பொழுது சர்க்கரையை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு நைசாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுத்து வறுத்த ரவை ஆறிய பின் அதையும் மிக்ஸி ஜாரில் போட்டு சற்று மொறு மொறுப்பாக இருக்குமாறு அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்றி மிதமான சூட்டில் இருக்குமாறு அந்த பாலை சுட வைத்து அடுப்பை அணைத்து விட்டு பாலை அடுப்பிலேயே வைத்திருக்க வேண்டும். பின்னர் ஒரு அகன்ற பாத்திரத்தில் அரைத்து வைத்திருக்கும் ரவை மற்றும் சர்க்கரையை கொட்டி அதனுடன் நறுக்கிய முந்திரி, அரைத்து வைத்திருக்கும் ஏலக்காய் தூள், மற்றும் உலர் திராட்சையை போட்டு கையின் மூலம் அதை நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் சுட வைத்த பாலில் இருந்து பாதி அளவுள்ள பாலை எடுத்து இந்த பாத்திரத்தில் ஊற்றி அதை சுற்றி இருக்கும் மாவில் ஒரு கைப்பிடி அளவு மாவை எடுத்து அதை நன்கு இறுக்கமாக பிடித்து அதனுடன் ஒரு பாதாமையும் வைத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். இது போலவே அனைத்து மாவையும் உருண்டைகளாக பிடித்துக் கொல்ல வேண்டும். இவ்வாறு பக்குவமாக செய்தால் ரவை உதிராமல் நன்றாக இருக்கும். இதனை உங்களது வீட்டிலும் செய்து பார்த்து ருசிக்கலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
டாபிக்ஸ்