சிறந்த காலை உணவிற்கு இனி இது தான் பெஸ்ட் சாய்ஸ்! சுவையான ராகி கஞ்சி செய்வது எப்படி? இதோ ஈசி ரெசிபி!
காலை உணவாக ராகியை தேர்ந்தெடுப்பது ஒரு சிறந்த தேர்வாக அமையும். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை கேழ்வரகு எடுத்துக் கொள்வது அதிகப்படியான நன்மைகளை உடலுக்கு அளிக்கிறது.
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் ஒவ்வொரு நாளும் நமது வாழ்க்கை முறை முற்றிலுமாக மாறி வருக்கிறது. அதில் முக்கியமனதாக நமது உணவு பழக்க வழக்கங்கள் வேறு மாதிரியான துரித உணவுகளை சார்ந்து இயங்கத் தொடங்கியுள்ளது. இப்படிப்பட்ட உணவுகளில் இருந்து நமது உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க இயற்கை உணவுகளை சாப்பிட வேண்டும். அதில் முன்னிலையில் இருப்பது, வரகு, சாமை போன்ற தானியங்கள் ஆகும். காலை உணவாக கேழ்வரகை தேர்ந்தெடுப்பது ஒரு சிறந்த தேர்வாக அமையும். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை கேழ்வரகு எடுத்துக் கொள்வது அதிகப்படியான நன்மைகளை உடலுக்கு அளிக்கிறது. இந்த ராகி மாவை வைத்து சத்தான கஞ்சி செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்
கால் கப் ராகி மாவு
3 கப் தண்ணீர்
ஒரு கப் தயிர்
7 முதல் 8 சின்ன வெங்காயம்
2 பச்சை மிளகாய்
சிறிதளவு கொத்துமல்லி தழை
தேவையான அளவு உப்பு
செய்முறை
முதலில் முந்தைய நாள் இரவே ராகி மாவை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில், தண்ணீர் மேல் உருவாகி இருக்கும் நுரையை அகற்றவும். பின்னர் ராகி மாவுடன் தண்ணீரின் அடிப்பகுதியை நன்றாக கலக்கி விடவும். வேறு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். ராகி கலவையை அந்த பாத்திரத்தில் மாற்றி 15 நிமிடங்கள் வரை கிளறவும். மேலும் அது கெட்டியாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். நடு நடுவே கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். இது முடிந்ததும், அடுப்பை ராகி கலவையை முழுவதுமாக ஆற விடவும்.
ஆறிய ராகி கலவையில் கெட்டியான தயிர், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். கஞ்சி மிகவும் கெட்டியாக இருந்தால் தண்ணீர் ஊற்றி கரைக்கவும். அவ்வளவுதான், ஆரோக்கியமான ராகி கஞ்சி பரிமாற தயாராக உள்ளது. நீங்கள் அதை மண்பானைகளில் சேமித்து, எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
ராகியின் நன்மைகள் மற்றும் சத்துகள்
100 கிராம் ராகியில் 320 கலோரிகள் உள்ளன. புரதச்சத்து 7 கிராம் உள்ளது. கார்போட்ரேட் சத்துக்கள் 67 கிராம் உள்ளது. நார்ச்சத்து 11 கிராம் உள்ளது. கால்சிய சத்து 364 மில்லி கிராம் உள்ளது. இரும்புச்சத்து 4.62 மில்லி கிராம் உள்ளது.
சிறுதானிய வகைகளுள் ஒன்றான ராகி பிங்கர் மில்லட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான தானியம். அதில் உள்ள சத்துக்களை தெரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் சைவ உணவுப்பிரியர் என்றால் கேழ்வரகு சிறந்த புரதச்சத்தை வழங்குகிறது. இதை நீங்கள் தினசரி உணவிலும் சேர்த்துக்கொள்ளலாம். இது சுவை நிறைந்ததும் கூட ஆகும்.
அதிக நார்ச்சத்து நிறைந்தது. இதனால், கேழ்வரகு உங்கள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
ராகி, உடல் எடை குறைப்பதற்கு உதவுகிறது. இதில் உள்ள அதிக புரதச்சத்து அடிக்கடி பசி ஏற்படாமல் தடுக்கிறது. இதனை உணவில் சேர்த்து வர உடல் எடையில் பெரிய மாற்றத்தை பார்க்கலாம்.
டாபிக்ஸ்