செரிமான அமைப்பை சரி செய்யும் முள்ளங்கி சட்னி! சூப்பரா செய்யலாம்! இதோ ஈசி ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  செரிமான அமைப்பை சரி செய்யும் முள்ளங்கி சட்னி! சூப்பரா செய்யலாம்! இதோ ஈசி ரெசிபி!

செரிமான அமைப்பை சரி செய்யும் முள்ளங்கி சட்னி! சூப்பரா செய்யலாம்! இதோ ஈசி ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Dec 26, 2024 11:45 AM IST

முள்ளங்கியை சாம்பாரில் போட்டால் சிலருக்கு பிடிப்பதில்லை. எனவே முள்ளங்கியை வைத்து சுவையான சட்னி செய்யலாம். இதனை செய்யும் எளிய முறையை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.

செரிமான அமைப்பை சரி செய்யும் முள்ளங்கி சட்னி! சூப்பரா செய்யலாம்! இதோ ஈசி ரெசிபி!
செரிமான அமைப்பை சரி செய்யும் முள்ளங்கி சட்னி! சூப்பரா செய்யலாம்! இதோ ஈசி ரெசிபி!

தேவையான பொருட்கள்

2 முள்ளங்கி 

அரை மூடி தேங்காய் 

2 டீஸ்பூன் எண்ணெய் 

1 பெரிய வெங்காயம் 

சிறிதளவு கறிவேப்பிலை

சிறிதளவு புளி 

அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்

1 டீஸ்பூன் எண்ணெய் 

2 டீஸ்பூன் மல்லித் தூள் 

2 டீஸ்பூன் சீரகம் 

8 வற மிளகாய்

கால் டீஸ்பூன் கடுகு

கால் டீஸ்பூன் சீரகம்

கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள்

சிறிதளவு கறிவேப்பிலை

செய்முறை

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி அடிக்கில் நறுக்கிய முள்ளங்கியை போட்டு வதக்கவும். பின்னர் அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். பின்னர் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும். இவை நன்கு வதங்கியதும் சிறிது கறிவேப்பிலை, சிறிது புளி, கல்லுப்பு, சிறிது மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் இதனை ஆறவிடவும். இப்போது மற்றொரு சிறிய கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும் பின் அதில் கொத்தமல்லி, சீரகம், வற மிளகாய் போட்டு வறுத்து ஆற வைக்க வேண்டும். 

இப்போது மிக்ஸி ஜாரில் முன் வறுத்த மல்லித்தூள், சீரகம் மற்றும் வற மிளகாய் சேர்த்து நன்கு அரைக்கவும். பிறகு வறுத்த முள்ளங்கி மற்றும் வெங்காயம் தேங்காய் கலவையை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து கலந்துவிட்டு சட்னியில் சேர்க்கவும். சுவையான முள்ளங்கி சட்னி தயார்.

முள்ளங்கியின் மருத்துவப் பயன்கள்

முள்ளங்கியில் விட்டமின் சி, இ, பி6, ஃபோலேட்டுகள் அதிகளவு காணப்படுகிறது. இதில் விட்டமின் ஏ, கே, பி2, பி5 (நியாசின்) ஆகியவை காணப்படுகின்றன. தாது உப்புக்களான கால்சியம், காப்பர், இரும்புச் சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், பொட்டாசியம் போன்றவை உள்ளன. மேலும் இதில் குறைந்த எரிசக்தி, கார்போஹைட்ரேட், புரதச்சத்து, அதிகளவு நார்சத்து போன்றவை காணப்படுகின்றன. இதில்  அதிகளவு நீர்ச்சத்தும் உள்ளது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு முள்ளங்கி சிறந்த தேர்வாகும்.

முள்ளங்கியானது கல்லீரல் மற்றும் செரிமான உறுப்புகளில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சினை நீக்க உதவுகிறது. முள்ளங்கியானது இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவினை அதிகரித்து இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது.  முள்ளங்கியில் அதிகளவு உள்ள நார்ச்த்து மற்றும் நீர்ச்சத்து மலத்தினை இளக்கி கழிவாக எளிதாக வெளியேற்றுகிறது. செரிமான உறுப்புகளில் உள்ள நச்சுப் பொருட்களை இக்காய் நீக்குவதால் மூலநோய், வாயு தொந்தரவு, மலச்சிக்கல் ஆகியவற்றிற்கு இது சிறந்த தீர்வாக உள்ளது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒரு போதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.