Punjab Chicken Gravy: சண்டே ஸ்பெஷல் ரெசிபி செய்யத் தயாரா? பஞ்சாப் சிக்கன் கிரேவி செஞ்சு பாருங்க! புது ரெசிபி!
Punjab Chicken Gravy: வேற்று மாநிலங்களின் உணவு முறைகளும் மிகவும் ருசியானதாக இருக்கும். இந்தியாவின் பல இடங்களில் சிக்கனை வைத்து விதவிதமான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. அந்த வரிசையில் இன்று பஞ்சாபி சிக்கன் கிரேவி செய்வது குறித்து இங்கு காணலாம்.

ஞாயிற்றுக்கிழமை வந்து விட்டாலே நமது வீடுகளில் அசைவ உணவுகள் என மணம் கமகமக்கும். ஞாயிற்றுக்கிழமை அசைவ உணவுகள் சாப்பிட வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகவே நமது குடும்பங்களில் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் நமது வீடுகளில் வழக்கமாக செய்யப்படும் அதே உணவுகளை சாப்பிட்டு சிலருக்கு சலித்து போகி இருக்கலாம். எனவே வித்தியாசமான வகையில் அசைவ உணவுகளை செய்து தரும்போது அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். தமிழ் நாட்டில் பெரும்பாலும் குழம்பு வகைகள், பிரியாணி வகைகள் தான் வழக்காம செய்யப்படும் உணவு வகைகள். வேற்று மாநிலங்களின் உணவு முறைகளும் மிகவும் ருசியானதாக இருக்கும். இந்தியாவின் பல இடங்களில் சிக்கனை வைத்து விதவிதமான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. அந்த வரிசையில் இன்று பஞ்சாபி சிக்கன் கிரேவி செய்வது குறித்து இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
அரை கிலோ சிக்கன்
அரை கப் தயிர்
அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
அரை டீஸ்பூன் சீரகத்தூள்
2 டீஸ்பூன் மல்லித்தூள்
அரை டீஸ்பூன் கரம் மசாலா
சிறிதளவு கஸ்தூரி மேத்தி
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு தண்ணீர்
2 பெரிய வெங்காயம்
அரை டீஸ்பூன் சீரகம்
ஒரு பட்டை
2 தக்காளி
2 கிராம்பு
2 ஏலக்காய்
1 பிரெஞ்சு இலை
செய்முறை
முதலில் சிக்கனை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். சுத்தம் செய்த பின்னர் சிக்கனில் மஞ்சள் தூள்,உப்பு, தயிர், மிளகாய் தூள் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் சீரகம், நறுக்கிய பெரிய வெங்காயம், பட்டை,கிராம்பு, ஏலக்காய், பிரஞ்சு இலை சேர்த்து வதக்கி விட வேண்டும். இவை அனைத்தும் நன்கு வதங்கிய பின்னர் அதனை எடுத்து ஆற வைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு ஆறியதும் அதை மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுக்கவும். பிறகு தக்காளியையும் மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
பின்னர் கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் அரைத்து வெங்காய விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும் வதங்கியதும் பிறகு அதில் அரைத்த தக்காளி விழுதையும் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கவும். பிறகு அதில் ஊற வைத்த சிக்கனை சேர்த்து வதக்கவும் பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் உப்பு கரம் மசாலா சேர்த்து 10 நிமிடம் வேக விடவும் பிறகு அதில் கஸ்தூரி மேதியை தூவி கிளறி இறக்கவும் இப்பொழுது சுவையான பஞ்சாப் சிக்கன் கிரேவி தயார். இது போன்று வித்தியாசமான முறையில் சிக்கனை செய்து தரும் போது சாப்பிடுவதற்கும் மாறுபட்ட சுவையில் இருக்கும். நீங்களும் இது போன்று உங்களது வீடுகளில் ட்ரை பண்ணி பார்த்து சாப்பிடுங்கள். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

டாபிக்ஸ்