Puliyadhorai Paste: நீண்ட நாட்கள் தாங்கும் புளியோதரை மசாலா.. தயாரிக்க ஈஸி..’ எப்படி செய்வது? வாங்க பார்க்கலாம்!
Puliyadhorai Paste: நீண்ட நாட்கள் வரை கெட்டுப்போகமால் இருக்கும் புளியதோரை மசாலா! இதற்கு சிறந்த தேர்வாக அமையும். இதனை எளிமையாக உங்கள் வீடுகளிலேயே எப்படி செய்வது என்பதை தெரிந்துக் கொள்ளை இந்த தொகுப்பை முழுமையாக படியுங்கள்.

வீட்டில் சமைப்பதற்கு நேரம் இல்லையென்றால் உடனடியாக ஏதேனும் இன்ஸ்டண்ட் உணவுகளை சமைத்து கொடுப்போம். ஆனால் இன்ஸ்டண்ட் உணவுகள் என நாம் கடைகளில் வாங்கும் நூடுல்ஸ், பாஸ்தா போன்றவைகளை தினமும் சாப்பிட முடியாது. இந்த உணவுகளை மதிய உணவிற்கும் கொடுத்து விட முடியாது. இந்த மாதிரி சமயங்களில் மிக்ஸிங் செய்து சாப்பிட தொக்கு, ரெடிமேட் குழம்பு வகைகள் ஏதேனும் இருந்தால் உதவியாக இருக்கும். ஆனால் கடைகளில் வாங்கும் ரெடிமேட் உணவுகள் சுத்தமான முறையில் தயாரிக்கப்படாமல் இருக்கலாம். எனவே வீட்டிலேயே நாம் இது போன்ற உணவுகளை தயாரித்து வைத்து பயன்படுத்தலாம். நீண்ட நாட்கள் வரை கெட்டுப்போகமால் இருக்கும் புளியதோரை மசாலா! இதற்கு சிறந்த தேர்வாக அமையும். இதனை எளிமையாக உங்கள் வீடுகளிலேயே எப்படி செய்வது என்பதை தெரிந்துக் கொள்ளை இந்த தொகுப்பை முழுமையாக படியுங்கள்.
தேவையான பொருள்கள்:
150 கிராம் புளி
அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
தேவையான அளவு உப்பு
4 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
அரை டீஸ்பூன் கடுகு
அரை டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பில்லை
2 டீஸ்பூன் கடலைப்பருப்பு
அரை டீஸ்பூன் பெருங்காயத் தூள்
தோல் உரித்த வறுத்த வேர்க்கடலை
4 பச்சை மிளகாய்
4 காய்ந்த மிளகாய் (மீடியம் சைஸ்)
ஒரு டீஸ்பூன் மல்லி விதை
ஒரு டீஸ்பூன் எள்ளு
செய்முறை:
முதலில் அடுப்பில் வெறும் கடாயை வைத்து சூடாக்க வேண்டும். கடாய் சூடானதும் அதில் காய்ந்த மிளகாய், கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, மல்லி விதை, மற்றும் எள்ளு சேர்த்து லேசாக வறுத்து எடுத்து வைத்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இவை அனைத்தும் நன்கு ஆறியதும் மிக்ஸ்சியில் போட்டு நன்றாக பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். முன்னதாக புளியை 200 மில்லி தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு போட்டுத் தாளிக்கவும். கடுகு வெடித்ததும் அதில் உளுந்தம் பருப்பு, மிளகாய் வத்தல், கடலைப்பருப்பு, வேர்க்கடலை கறிவேப்பிலை ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டுத் தாளிக்கவும். அத்துடன் பெருங்காயத்தையும் சேர்க்கவும்.
பின்னர் புளித் தண்ணீர், மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும். இதனை புளிக் காய்ச்சல் என்பார்கள். இதனை தண்ணீர் இல்லாத ஒரு பாத்திரத்தில் சேமித்து வைக்க வேண்டும். இது உங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். தேவைப்படும் காலத்தில் இந்தப் புளிக் காய்ச்சல் கெட்டியானதும் உப்பு மற்றும் வறுத்து பொடித்த தூளை சேர்த்து கிளறி ஆற வைத்துள்ள சாதத்தில் தேவையான அளவு இந்தப் புளிக்காய்ச்சலை சேர்த்து கிளறி விட வேண்டும். அப்போது மேலும் சிறிது உப்பு தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளவும். இப்போது சுவையான புளி சாதம் ரெடி. இதனை உங்களது வீடுகளில் செய்து பார்த்து மகிழுங்கள். புளியில் கால்சியம், வைட்டமின் - பி பாஸ்பரஸ், இரும்பு போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன, உணவில் மணமூட்டவும், சுவையூட்டவும் புளி பயன்படுகிறது.

டாபிக்ஸ்