Prawn Gravy: காரசாரமான இறால் கிரேவி! செமையா செஞ்சு அசத்தலாம்! மாஸ் ரெசிபி உள்ளே!
Prawn Gravy: கடல் உணவுகள் மிகவும் ருசியானதாகவும் சாப்பிடுவதற்கு எளிதாக ஒன்றாகவும் இருக்கும். ஆனால் கடல் உணவுகளை சமைப்பது என்பது சற்று சிக்கலான காரியம் தான். ஏனெனில் கடல் உணவுகளை மிகவும் மெனக்கெட்டு அதன் கழிவுகளை நீக்கி பின்னர் சமையல் செய்ய வேண்டியதாக இருக்கும்.

கடல் உணவுகள் மிகவும் ருசியானதாகவும் சாப்பிடுவதற்கு எளிதாக ஒன்றாகவும் இருக்கும். ஆனால் கடல் உணவுகளை சமைப்பது என்பது சற்று சிக்கலான காரியம் தான். ஏனெனில் கடல் உணவுகளை மிகவும் மெனக்கெட்டு அதன் கழிவுகளை நீக்கி பின்னர் சமையல் செய்ய வேண்டியதாக இருக்கும். ஆனால் கடல் உணவில் பல விட்டமின்களும் புரதச்சத்துக்களும் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். நமது அன்றாட வாழ்வில் கடல் உணவுகளை எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கும் எனவும் கூறப்படுகிறது. அத்தகைய கடல் உணவுகளை அடிக்கடி நமது உணவுகளில் சேர்த்துக் கொள்வதை வழக்கமாக வேண்டும்.
நம் வீட்டில் மீன் என்றால் அனைவருக்கும் தெரியும் எளிதாக மீன் குழம்பு வைத்து விடுவார்கள். ஆனால் அதனை தாண்டி உள்ள கடல் உணவுகளை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஏனெனில் நண்டு, இறால் போன்றவற்றை சுத்தம் செய்வதற்கே தனியாக நேரம் ஒதுக்க வேண்டும். இறால் சாப்பிட்டால் மிகவும் ருசியானதாகவும் நல்ல சத்துக்களும் உடலுக்கு கிடைக்கும். இந்த இறாலை வைத்து சுவையான காரசாரமான கிரேவி செய்வது எப்படி என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருள்கள்
1 கப் இறால்
20 முதல் 24 சின்ன வெங்காயம்
6 பற்கள் பூண்டு
1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் -
2 தக்காளி
1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
1 டீஸ்பூன் மிளகாய் தூள்
2 டீஸ்பூன் மல்லி தூள்
1 டீஸ்பூன் கரம் மசாலா
ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி
தேவையான அளவு உப்பு
2 டீஸ்பூன்எண்ணெய் -
சிறிய அளவிலான ஒரு பட்டை துண்டு
2 கிராம்பு
1 பிரியாணி இலை
சிறிதளவு கறிவேப்பிலை
அரைப்பதற்கு
அரை கப் துருவிய தேங்காய்
1 டீஸ்பூன் சோம்பு
செய்முறை
முதலில் இறாலை நீரில் நன்கு சுத்தமாக கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் மஞ்சள் தூள், உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் தேங்காய், சோம்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் தாளிப்பதற்கு எடுத்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அடுத்து அரைத்து வைத்துள்ள தக்காளி, மல்லி தூள், கரம் மசாலா சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
பின்பு அதில் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, 3 நிமிடம் இறால் சுருங்கும் வரை கிளறி, பின் அதில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து, இறால் மென்மையாக வெந்தமும், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து, எண்ணெயும், கிரேவியும் தனியாக பிரியும் வரை நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், இறால் கிரேவி ரெடி!!!

டாபிக்ஸ்