சுட சுட உருளைக்கிழங்கு சமோசா செய்வது எப்படி? ஈவினிங் டீயுடன் சாப்பிட பக்கா ஸ்நாக்ஸ்!
சமோசா இந்த மாலை நேர சிற்றுண்டிக்கு சிறந்த உணவாக அமையும். எளிமையான முறையில் உருளைக்கிழங்கு மசாலா சேர்த்து சமோசா செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
மாலை நேரம் வந்தாலே சுட சுட டீயுடன் சாப்பிடல் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. வேலையில் இருந்து திரும்பி வருபவர்கள் மற்றும் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகள் என அனைவருக்கும் ஸ்நாக்ஸ் சாப்பிட கொடுத்தால் மிகவும் மகிழ்ச்சியாக சாப்பிடுவார்கள். அதிலும் சமோசா இந்த மாலை நேர சிற்றுண்டிக்கு சிறந்த உணவாக அமையும். எளிமையான முறையில் உருளைக்கிழங்கு மசாலா சேர்த்து சமோசா செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
தேவையான பொருட்கள்
அரை கப் கோதுமை மாவு
அரை கப் மைதா மாவு
3 உருளைக்கிழங்கு
100 கிராம் பச்சை பட்டாணி
2 பச்சை மிளகாய்
3 பல் பூண்டு
சிறிதளவு இஞ்சி
1 டேபிள்ஸ்பூன் ஓமம் தூள்
அரை டேபிள்ஸ்பூன் சீரகம்
அரை டேபிள்ஸ்பூன் மல்லி தூள்
அரை டேபிள்ஸ்பூன் கரம் மசாலா
அரை டேபிள்ஸ்பூன் சீரக தூள்
அரை டேபிள்ஸ்பூன் மிளகு தூள்
அரை டேபிள்ஸ்பூன் ஆம்சூர் தூள்
தேவையான அளவு மிளகாய் தூள்
தேவையான அளவு எண்ணெய்
தேவையான அளவு உப்பு
சிறிதளவு கொத்தமல்லி
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்து ஆறிய பின் மசித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு அகன்ற பாத்திரத்தில் எடுத்து அதில் கோதுமை மாவு, மைதா மாவு, ஓமம் தூள், சிறிதளவு உப்பு, மற்றும் எண்ணெய்யை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும். பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அதை நன்கு பிணைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கொண்டு வர வேண்டும். பின்னர் அதை ஒரு மூடி போட்டு ஊற விட வேண்டும். இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அதை சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் சீரகம்,நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.பிறகு உரித்து வைத்திருக்கும் பச்சை பட்டாணியை போட்டு வதக்கவும்.
பிறகு அதில் மசித்த உருளைக்கிழங்கு, மல்லி தூள், கரம் மசாலா, சீரக தூள், மிளகு தூள், ஆம்சூர் தூள், கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு, மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும். அது வெந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதை கீழே இறக்கி வைத்து சிறிது நேரம் ஆற விடவும்.இப்பொழுது சப்பாத்தி மாவை உருண்டைகளாக பிடித்து தேய்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை பாதியாக வெட்டி கூம்பு வடிவில் மடித்து அதனுள் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து அதை அடியில் மடித்து அதன் ஓரங்களை சிறிது தண்ணீர் வைத்து மூடவும். இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும். எண்ணெய் சூடானதும் சமோசாவை ஒவ்வொன்றாக போட்டு அதை நன்கு பொன்னிறம் ஆகும் வரை வேக விடவும். சமோசா பொன்னிறமானதும் ஒரு ஜல்லி கரண்டியின் மூலம் அதை எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து ஒரு கிண்ணத்தில் வைத்து சுட சுட கெட்சப் உடன் பரிமாறவும்.
டாபிக்ஸ்