இத மட்டும் செஞ்சு பாருங்க! வேற எதுவும் தேவையில்லை! ருசியான உருளைக்கிழங்கு கறி செய்வது எப்படி?
வீட்டில் இருக்கும் உருளைக் கிழங்கை வைத்தே சுவையான கம கமக்கும் பொரியல் செய்யலாம். இதனை சூடான சாதம், சப்பாத்தி மற்றும் பரோட்டா என எல்லா வகையான உணவுகளுக்கும் இதனை இணை உணவாக வைத்து சாப்பிடலாம். வீட்டிலேயே இந்த உருளைக் கிழங்கு கறியை செய்யும் எளிய முறையை இங்கே தெரிந்துக் கொள்ளலாம்.
வீட்டில் ஒவ்வொரு நாளும் வித விதமாக சமைப்பது என்பது மிகவும் கடினமான காரியம் ஆகும். நாம் ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக சமைத்து கொடூத்தால் தான் வீட்டில் உள்ளவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். வீட்டில் இருக்கும் உருளைக் கிழங்கை வைத்தே சுவையான கம கமக்கும் பொரியல் செய்யலாம். இதனை சூடான சாதம், சப்பாத்தி மற்றும் பரோட்டா என எல்லா வகையான உணவுகளுக்கும் இதனை இணை உணவாக வைத்து சாப்பிடலாம். வீட்டிலேயே கல்யாண வீடுகளில் செய்யப்படு இந்த உருளைக் கிழங்கு கறியை செய்யும் எளிய முறையை இங்கே தெரிந்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
தயிர் கலவை செய்ய
அரை கப் தயிர்
அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
2 டீஸ்பூன் மிளகாய் தூள்
1 டீஸ்பூன் சீரக தூள்
2 டீஸ்பூன் மல்லித்தூள்
1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
1 டீஸ்பூன் மிளகு தூள்
தேவையான அளவு உப்பு
1 டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி
உருளைக்கிழங்கு கறி செய்ய
கால் கிலோ உருளைக் கிழங்கு
5 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
1 டீஸ்பூன் சீரகம்
பச்சை மிளகாய்
2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
3 பெரிய வெங்காயம்
தக்காளி
தயிர் கலவை
சிறிதளவு வெண்ணெய்
1 குடைமிளகாய்
சிறிதளவு கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில் தயிர் மசாலா செய்து வைத்து எடுத்தக் கொள்ள வேண்டும். அதற்கு ஒரு அகன்ற கிண்ணத்தை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதில் அரை கப் தயிர் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா தூள், மிளகு தூள் சேர்க்கவும். உப்பு மற்றும் கஸ்தூரி மேத்தி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலக்கி கொள்ளவும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடானதும் அதில் சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி கொள்ளவும். மேலும் இதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின்னர் இதில் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும். இப்பொழுது அடுப்பில் தீயை குறைத்து செய்து வைத்திருந்த தயிர் கலவையை ஊற்றி நன்கு கலக்கவும். தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கடாயை மூடி 10 நிமிடம் வேக விடவும். பின்னர் இப்பொழுது ஒரு சிறிய கடாயில் வெண்ணெய், வெங்காயம், குடைமிளகாய், வேக வைத்து நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து ஒன்றாக கலக்கவும். இவை அனைத்தையும் கிளறி விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். மேலும் வெங்காயம், குடைமிளகாய், உருளைக்கிழங்கு ஆகியவற்றை வெங்காய தக்காளி கலவையில் சேர்த்து நன்கு கலக்கவும். இப்பொழுது தண்ணீர் சேர்த்து கலந்து கடாயை மூடி சில நிமிடங்கள் வேக வைக்கவும். தற்போது நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும். சூடான உருளைக்கிழங்கு கறி தயார். இதனை சாதம் அல்லது சப்பாத்தி என அணைத்துடனும் சாப்பிடலாம்.
டாபிக்ஸ்