பார்த்தாலே சாப்பிட தூண்டும் பைனாப்பிள் கேசரி! இப்போவே செய்யலாம்! ஈசி ரெசிபி இதோ!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பார்த்தாலே சாப்பிட தூண்டும் பைனாப்பிள் கேசரி! இப்போவே செய்யலாம்! ஈசி ரெசிபி இதோ!

பார்த்தாலே சாப்பிட தூண்டும் பைனாப்பிள் கேசரி! இப்போவே செய்யலாம்! ஈசி ரெசிபி இதோ!

Suguna Devi P HT Tamil
Nov 04, 2024 08:33 AM IST

வீட்டில் விசேஷம் என்றாலே உடனே செய்யக்கூடிய இனிப்பு உணவாக கேசரி இருந்து வருகிறது. இதனை எளிதாக சில நிமிடங்களிலேயே செய்து விடலாம்.

பார்த்தாலே சாப்பிட தூண்டும் பைனாப்பிள் கேசரி! இப்போவே செய்யலாம்! ஈசி ரெசிபி இதோ!
பார்த்தாலே சாப்பிட தூண்டும் பைனாப்பிள் கேசரி! இப்போவே செய்யலாம்! ஈசி ரெசிபி இதோ! (Awesome Cuisine)

தேவையான பொருட்கள்

 பைனாப்பிள் பழம் 

1 கப் ரவை

2 கப் சர்க்கரை

20  முந்திரி பருப்பு

20 உலர் திராட்சை

ஒரு  டீஸ்பூன் ஏலக்காய் தூள்

பைனாப்பிள் எசன்ஸ்

பூட் கலர்

தேவையான அளவு எண்ணெய்

தேவையான அளவு நெய்

சிறிதளவு குங்கும பூ

செய்முறை

முதலில் பைனாப்பிளின் தோலை சீவி அதன் நடு பாகத்தை நீக்கி விட்டு சதையை மட்டும் நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரையை போட்டு அதை நன்கு கலந்து விட்டு ஊற வைக்கவும். பின்பு ஒரு கடயாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய், 2 டேபிள்ஸ்பூன் அளவு நெய் ஊற்றி அதை சசூடாக்கவும். நெய் சூடான பின் அதில் நறுக்கிய முந்திரி பருப்பை போட்டு அது லேசாக வறுபட்டதும் அதில் உலர் திராட்சையையும் போட்டு முந்திரி பருப்பு பொன்னிறமாகும் வரை அதை வறுக்கவும்.அதை எடுத்து தனியே ஒரு பாத்திரத்தில் வைக்கவும். 

பின்னர் அதே கடாயில் ரவையை போட்டு அது லேசாக பொன்னிறமாகும் வரை அதை வறுக்கவும். ரவை வறுபடுவதர்க்குள் ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 3 கப் அளவு தண்ணீர் சேர்த்து அது லேசாக சுட்டதும் அதில் ஃபுட் கலரை போட்டு அதை சுட வைக்கவும்.  தண்ணீர் சுட்டதும் அதை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ரவையில் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு அடுப்பை குறைத்து வைத்து ரவை நன்கு வேகும் வரை அதை வேக விடவும். பின்னர் அதில் சர்க்கரையை சேர்க்க வேண்டும். அதை நன்கு கிளறி விடவும். பிறகு அதில் பைனாப்பிள் எசன்ஸ்ஸை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும். அடுத்து சர்க்கரையை போட்டு ஊற வைத்திருக்கும் பைனாப்பிளை அதில் சேர்த்து அதை நன்கு கலந்து விடவும். பின்னர் அதில் நெய்யை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும். பின்பு அதில் ஏலக்காய் தூள் மற்றும் குங்கும பூவை தூவி அதை நன்கு கலந்து விட்டு அது லேசாக கெட்டியாகும் வரை அதை வேக விடவும்.அது லேசாக கெட்டியானதும் அதில் வறுத்து வைத்திருக்கும் முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சையை போட்டு அதை நன்கு கலந்து விட்டு அடுப்பை அணைத்து விட்டு அதை சிறிது நேரத்திற்கு பிறகு எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து சுட சுட பரிமாறவும்.இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையாக இருக்கும் பைனாப்பிள் கேசரி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.