Luffa Recipe: எல்லாருக்கும் பிடித்த மாதிரி பீர்க்கங்காய் பச்சடி செய்வது எப்படி? இதோ ஈசி ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Luffa Recipe: எல்லாருக்கும் பிடித்த மாதிரி பீர்க்கங்காய் பச்சடி செய்வது எப்படி? இதோ ஈசி ரெசிபி!

Luffa Recipe: எல்லாருக்கும் பிடித்த மாதிரி பீர்க்கங்காய் பச்சடி செய்வது எப்படி? இதோ ஈசி ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Jan 19, 2025 09:57 AM IST

Luffa Recipe: பீர்க்கங்காய் ஒரு அதிக சத்துக்களைக் கொண்ட காய்கறியாகும். இதனை சமையலில் சேர்க்கும் போது அவ்வளவு ருசியாக இருப்பதில்லை. எனவே அதனை நல்ல சுவையுடன் சமைப்பது சற்று கடினமான காரியமாகும். பீர்க்கங்காய் வைத்து சுவையான பச்சடி செய்வது எப்படி என்பதை இங்கு பார்க்கலாம்.

Luffa Recipe: எல்லாருக்கும் பிடித்த மாதிரி பீர்க்கங்காய் கூட்டு செய்வது எப்படி? இதோ ஈசி ரெசிபி!
Luffa Recipe: எல்லாருக்கும் பிடித்த மாதிரி பீர்க்கங்காய் கூட்டு செய்வது எப்படி? இதோ ஈசி ரெசிபி!

தேவையான பொருள்கள் 

2 பீர்க்கங்காய்

சிறிதளவு புளி 

அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்

தேவையான அளவு உப்பு 

அரை மூடி துருவிய தேங்காய் 

2 முதல் 4 பச்சை மிளகாய்

10 முதல் 12 சின்ன வெங்காயம்

1 டீஸ்பூன் சீரகம் 

தேவையான அளவு எண்ணெய் 

அரை டீஸ்பூன் கடுகு 

அரை டீஸ்பூன் உளுந்தம்பருப்பு  

 4 சின்ன வெங்காயம் 

ஒரு கை கொத்து அளவு கறிவேப்பிலை

செய்முறை 

முதலிள் பீர்க்கங்காயின் தோலை சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் சின்ன வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் எலுமிச்சை அளவு உள்ள புளியை தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு மிக்சி ஜாரில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், சீரகம் எல்லாவற்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, உளுந்தம்பருப்பு போடவும். கடுகு வெடித்தவுடன் சிறிதளவு  கறிவேப்பிலை, நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் பொடியாக நறுக்கிய பீர்க்கங்காய் துண்டுகளை சேர்த்து கிளறவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பீர்க்கங்காயில் நீர் சத்து இருப்பதால் தண்ணீர் அதிகம்  சேர்க்க தேவை இல்லை. பீர்க்கங்காய் வெந்தவுடன் புளித் தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.  பச்சை வாடை போனதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்க்கவும். பச்சடி கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும். சுவையான பீர்க்கங்காய் பச்சடி ரெடி இதனை உங்களது வீட்டில் செய்து கொடுத்து சாப்பிட்டு பாருங்கள். 

பீர்க்கங்காயின் நன்மைகள்

  • பீர்க்கங்காயில் அதிக நீர்ச்சத்து இருப்பதால், உடலில் உள்ள சூட்டைக் குறைக்க உதவுகிறது.
  • பீர்க்கங்காயில் ஜிங்க், பொட்டாசியம், காப்பர், செலினியம் போன்ற மினரல்கள் நிறைந்துள்ளன.
  • பீர்க்கங்காய் சாப்பிடுவதால், பசியைக் குறைக்கலாம்.
  • பீர்க்கங்காய் சாப்பிடுவதால், உடல் எடை குறைவதோடு ஆரோக்கியமான சருமம் கிடைக்கும்.
  • பீர்க்கங்காயில் உள்ள இலைகள், விதைகள், வேர் ஆகியவை மருத்துவக் குணம் கொண்டவை.
  • பீர்க்கங்காய் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்தி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுக்குள் இருக்கும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒரு போதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.