குளிர் காலத்திற்கு ஏற்ற மிளகு சாதம்! லஞ்ச் பாக்ஸ்க்கு சூப்பர் சாய்ஸ்! இதோ ஈசி ரெசிபி!
குளிர் காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏதேனும் உடல்நலக் கோளாறு வந்துக் கொண்டே இருக்கும். இதற்கு இந்த கால நிலையைத் தாண்டி நாம் முறையின்றி சாப்பிடும் உணவுகளும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். எனவே இந்த காலநிலைக்கு ஏற்ப உணவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
குளிர் காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏதேனும் உடல்நலக் கோளாறு வந்துக் கொண்டே இருக்கும். இதற்கு இந்த கால நிலையைத் தாண்டி நாம் முறையின்றி சாப்பிடும் உணவுகளும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். எனவே இந்த காலநிலைக்கு ஏற்ப உணவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். குளிர் மற்றும் மழைக் காலங்களில் மிளகை உணவில் சேர்த்துக் கொள்வது பல நன்மைகளைத் தருகிறது. மிளகை வைத்து செய்யப்படும் சிறந்த லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாக மிளகு சாதம் இருக்கும். நீங்கள் எளிமையாக மிளகு சாதம் செய்வது எப்படி என்பதை இங்கு தெரிந்துக் கொள்ளலாம். இது சாப்பிடுவதற்கு சிறப்பான சுவையுடனும் இருக்கும்.
தேவையான பொருட்கள்
அரை கிலோ பாசுமதி அரிசி
1 டேபிள்ஸ்பூன் மிளகு
1 டீஸ்பூன் சீரகம்
தேவையான அளவு எண்ணெய்
2 டீஸ்பூன் நெய்
1 டீஸ்பூன் கடலை பருப்பு
1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
1 டீஸ்பூன் கடுகு
முந்திரி பருப்பு
கால் டீஸ்பூன் பெருங்காய தூள்
பூண்டு
ஒரு பெரிய சைஸ் வெங்காயம்
4 முதல் 5 பச்சை மிளகாய்
சிறிதளவு கறிவேப்பிலை
தேவையான அளவு உப்பு
பொடித்த மிளகு சீரக தூள்
செய்முறை
முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர். இதனை ஒரு குக்கர் அல்லது ஒரு பாத்திரத்தில் போட்டு உதிரியாக இருக்குமாறு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வேக வைக்கும் போது இதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றினால் ஒட்டாமல் வேகும். பின்னர் ஒரு மிக்சியில் மிளகு மற்றும் சீரகத்தை எடுத்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும் அதில் எண்ணெய் மற்றும் நெய் சேர்க்க வேண்டும். இந்த நெய் உருக்கியதும் இதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு மற்றும் சில முந்திரி பருப்பை சேர்க்க வேண்டும். இவை அனைத்தும் பொன்னிறமாக வறுபட்டதும், அதில் பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வறுக்க வேண்டும்.
பின்னர் இதில் 4 பச்சை மிளகாயை கீறி போட வேண்டும். மேலும் இதில் ஒரு கைப்பிடி அளவுள்ள கறிவேப்பிலையை போட்டு கிளறி விட வேண்டும். மேலும் இதில் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். இவை அனைத்தும் ஓரளவிற்கு வறுபட்டதும் இதில் முன்னதாக அரைத்து வைத்திருக்கும் மிளகு, சீரகத்தூள் கலவையை சேர்த்து மீண்டும் கிளறி விடவும். பின்னர் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் சாதத்தை சேர்த்து, அனைத்தையும் நன்கு கிளறி கலக்கி விட வேண்டும். மேலும் இதில் சிறிது மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். இப்பொழுது சுவையான மற்றும் சூடான மிளகு சாதம் நன்றாகவும் சூடாகவும் பரிமாற தயார். இது மதிய உணவிற்கான லஞ்ச் பாக்ஸ்க்கு சிறந்த தேர்வாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனை விரும்பி சாப்பிடுவார்கள்.
டாபிக்ஸ்