Peas Pulao: நான்வெஜ் ஸ்டைலில் பட்டாணி புலாவ் செய்யத் தெரியுமா? இதோ பக்காவான ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Peas Pulao: நான்வெஜ் ஸ்டைலில் பட்டாணி புலாவ் செய்யத் தெரியுமா? இதோ பக்காவான ரெசிபி!

Peas Pulao: நான்வெஜ் ஸ்டைலில் பட்டாணி புலாவ் செய்யத் தெரியுமா? இதோ பக்காவான ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Jan 15, 2025 11:06 AM IST

Peas Pulao:சைவ உணவுகளையும் மிகவும் சுவையாக செய்து விடலாம். இப்பொழுது சுவையான பட்டாணி புலாவ் செய்வதை தெரிந்துக் கொண்டு உங்கள் வீடுகளில் செய்து கொடுத்து அசத்துங்கள்.

Peas Pulao: நான்வெஜ் ஸ்டைலில் பட்டாணி புலாவ் செய்யத் தெரியுமா? இதோ பக்காவான ரெசிபி!
Peas Pulao: நான்வெஜ் ஸ்டைலில் பட்டாணி புலாவ் செய்யத் தெரியுமா? இதோ பக்காவான ரெசிபி!

தேவையான பொருட்கள்

1 கப் பாசுமதி அரிசி

அரை கப் பச்சை பட்டாணி

2 பெரிய வெங்காயம்

3 பச்சை மிளகாய்

6 பல் பூண்டு

சிறிய துண்டு இஞ்சி

கால் டீஸ்பூன் சீரகம்

3 கிராம்பு

2 ஏலக்காய்

1 துண்டு பட்டை

1 பிரியாணி இலை

அரை கப் தேங்காய் பால்

தேவையான அளவு உப்பு

தேவையான அளவு புதினா

தேவையான அளவு நெய்

தேவையான அளவு எண்ணெய்

தேவையான அளவு தண்ணீர்

செய்முறை

முதலில் பாசுமதி அரிசியை கழுவி ஊற வைக்கவும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில்  நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, மற்றும் பூண்டை சேர்த்து அதை நன்கு கொரகொரப்பான பதத்திற்க்கு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் மற்றும்  நெய் சேர்த்து அதை சுட வைக்கவும். எண்ணெய் சுட்டதும் அதில் சீரகம், கிராம்பு, ஏலக்காய், பட்டை, மற்றும் பிரியாணி இலையை சேர்த்து அதை நன்கு வதக்கவும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும்  பச்சை மிளகாயை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு வெங்காயம் சற்று நிறம் மாறும் வரை அதை வதக்கவும். வெங்காயம் சற்று நிறம் மாறியதும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு கலவையை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.

ஒரு நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் உறித்து வைத்திருக்கும் பச்சை பட்டாணி மற்றும் ஒரு மேஜைகரண்டி அளவு உப்பு சேர்த்து அதை சுமார் ஐந்து நிமிடம் வரை வதக்கவும். ஐந்து நிமிடத்திற்க்குப் பிறகு அதில் நாம் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை போட்டு அதை ஒரு கரண்டியின் மூலம் அரிசி உடைந்து விடாமல் பக்குவமாக கிளறி விட்டு சுமார் ரெண்டு நிமிடம் வரை வேக விடவும். ரெண்டு நிமிடத்திற்க்குப் பிறகு அதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் தேங்காய் பாலை சேர்த்து அதை ஒரு கரண்டியின் மூலம் நன்கு கலந்து விடவும். பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் புதினா இலைகளை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு ஒரு மூடி போட்டு ஆவி வந்தவுடன் அதில் விசிலை போட்டு சுமார் ஒரு விசில் வரும் வரை அதை வேக விடவும். ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு அதை சுமார் ஐந்து நிமிடம் வரை அப்படியே வைக்கவும். ஐந்து நிமிடத்திற்க்கு பிறகு மூடியை திறந்து பீஸ் புலாவை ஒரு கரண்டியின் மூலம் பக்குவமாக கிளறி எடுத்து ஒரு தட்டில் வைத்து அதை சுட சுட பரிமாறவும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.